சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியின் (30 April, 2021) சிறப்புகள் என்ன தெரியுமா?
பிற மாதங்களில் வரும் பெளர்ணமி தினங்களை விட அதிக சிறப்புகளைக் கொண்டது. அதேபோல, சித்திரை மாத பெளர்ணமிக்கு நான்காவது நாளில் வரும் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பிற மாதங்களில் வரும் பெளர்ணமி தினங்களை விட அதிக சிறப்புகளைக் கொண்டது. அதேபோல, சித்திரை மாத பெளர்ணமிக்கு நான்காவது நாளில் வரும் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மிகவும் சிறப்பு வாய்ந்த சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினம் இன்று. இன்றைய தினத்தில், கணபதியின் தாள் தொழுது வழிபட்டால், வாழ்வில் வளம் அனைத்தும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
கடன் தீர, கஷ்டங்கள் காணாமல் போக இன்று பிள்ளையாரை எவ்வாறு வணங்குவது? உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா?
இன்று சித்திரை மாதம், அதுவும் வெள்ளிக்கிழமை அன்று வரும் இந்த சங்கடஹரசதுர்த்தி நாளில், விநாயகரை எந்த முறைப்படி, எந்த மந்திரத்தை உச்சரித்து, எந்த பூவை கொண்டு, எப்படி வழிபாடு செய்தால் நம்முடைய கடன் பிரச்சனை தீரும் என்பதை பாரப்போம்.
Also Read | தீராத கடன் தொல்லையா; ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்க கடன் தீரும்
சுக்கிர பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் உரியது வெள்ளிக்கிழமை. இன்று அன்னை லட்சுமியை வழிபட்டு சகல செளபாக்கியங்களையும் பெறலாம். ஸ்படிகத்தில் செய்யப்பட்ட விநாயகரை நம் வீட்டில் வைத்து பூஜை செய்தால், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
வீட்டில் விநாயகர், எந்த ரூபத்தில் இருந்தாலும் அந்த விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று விநாயகருக்கு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். வெள்ளை நிற மல்லிகை பூ, முல்லை, ஜாதி மல்லி, வெள்ளெருக்கம் பூ என வெண்மையான பூக்களால் அலங்காரம் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பால் தயிர் வெல்லம் இந்த மூன்று பொருட்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு பால் அபிஷேகம் தயிர் அபிஷேகம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். அதேபோல, கோவிலில் கணபதிக்கு அபிஷேகத்திற்குப் பால் தயிர் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
Also Read | இன்றைய ராசிபலன் (30 ஏப்ரல் 2021) சொல்வது என்ன?
வீட்டில் உள்ள விநாயகரது படத்தை சுத்தமாக துடைத்து பொட்டுவைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகம் புல்லையும் வைக்க வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பால், தனியாக ஒரு தட்டில் வெல்லம் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் போல வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பூஜை அறையில் விநாயகர் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு பாயை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அத்தனை கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்று விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு கண்களை மூடி மனதார ‘ஓம் பாலசந்த்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரங்கள் கொண்டு பூஜித்த பிறகுக், தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். சங்கடஹர சதுர்த்தி பூஜையை மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் தொடங்குவது மிகவும் நல்லது. அப்போது தான் சந்திரபகவான் உதயமாகி இருப்பார் அல்லவா? இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று காலை முதல் உபவாசம் இருந்து, மாலையில் விநாயகரை வழிபாடு செய்வது பல நல்ல பலன்களை கொடுக்கும்.
உண்மையான பக்தியோடு சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வளம் உண்டு...
Also Read | இன்றைய பஞ்சாங்கம் 30 ஏப்ரல் 2021
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR