உணவே மருந்து என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான் என்பதும் பலருக்கும் தெரியும். அதிலும், பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் எண்ணில் அடங்கா சத்துக்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீரைகளில், வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது வல்லமை தரும் வல்லாரைக் கீரை. நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் வல்லாரையை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்.


Also Read | Cook with MLA: சிக்கன் 65 சமைத்து மக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்


வல்லாரை கீரை பொரியல் செய்வது மிகவும் சுலபமானதே. தேவையான பொருட்கள்


வல்லாரை கீரை 2 கட்டு 


பெரிய வெங்காயம் 1 


மிளகாய் வற்றல் 3 


உளுந்தம் பருப்பு 1டீஸ்பூன் 


கடுகு அரை டீஸ்பூன் 


எண்ணெய் மற்றும் உப்பு தேவைக்கேற்ப 


மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் 


தேங்காய் துருவல் கால் கப்


செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு வல்லாரை கீரை சேர்த்து வதக்கவும். வல்லாரை நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.


அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். கீரை நன்கு வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும். இப்போது வல்லாரை கீரை பொரியல் தயார். 


Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்


ரச சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் வல்லாரைக் கீரையை சாப்பிட்டால் சுவை அபாரமாக அசத்தும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR