தொழில் அதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானி மும்பையில் 1995ம் ஆண்டு பிறந்தவர். அம்பானிக்கு இவரை தவிர ஆகாஷ் மற்றும் இஷா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உலகின் பணக்கார குடும்பங்களின் பெயரில் அம்பானி பெயரும் உள்ளது. இந்நிலையில், அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு மற்றும் படிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம். ஆனந்த் அம்பானி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் படித்தார். பின்பு தனது இளங்கலை படிப்பை பிரவுன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர் கடந்த மார்ச் 2020 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், மே 2022 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், நியூ சோலார் எனர்ஜி லிமிடெட், ரிலையன்ஸ் அறக்கட்டளை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் இயக்குநராக இருந்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ration Card Rules: ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்


இது தவிர ஆனந்த் அம்பானி ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வம் காட்டி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் இவரை காண முடியும். தனது சொந்த நிறுவனங்களை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மேக்கர் குழுமத்துடன் இணைந்து மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ராவில் ஆனந்த்விலாஸ் என்ற பெயரில் சொகுசு ரிசார்ட் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி உள்ளார். பிரபல நிறுவனமான ஓபராய் குழுமம் இந்த ரிசார்ட்டை முழுமையாக பார்த்து வருகிறது. மேலும் இந்த ரிசார்ட் ஆனந்த் அம்பானியின் பங்களிப்பு மற்றும் திட்டத்துடன் இயங்கும்.


ஆனந்த் அம்பானியின் தந்தையான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். முகேஷ் அம்பானி தற்போது உலகளவில் 11வது பணக்காரராக உள்ளார். இவர்  ஃபோர்ப்ஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு தொழில்களை மேற்பார்வையிடுகிறார். ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த விழா சமீபத்தில் குஜராத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. உலகில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணம் வரும் ஜூலை 12, 2024 அன்று நடைபெற உள்ளது.


அம்பானி தவிர ஆனந்திடம் தனியாக சொத்துக்கள் உள்ளன. உலகின் மிகவும் தனித்துவமான தனியார் விடுதிகளில் ஒன்றான ஆன்டிலியாவின் உரிமையை ஆனந்த் வைத்துள்ளார். கூடுதலாக இவரது பெயரிலும் இவரது குடும்பத்தினர் பெயரிலும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளது. துபாயில் உள்ள பாம் ஜுமேராவில் கடற்கரை வில்லா ஒன்று உள்ளது. மேலும் லண்டனில் உள்ள ஸ்டோக் ஹவுஸ் மற்றும் நியூயார்க் நகரத்தில் மாண்டரின் ஓரியண்டல் இடங்களில் சொத்துக்கள் உள்ளது. ஆனந்த் அம்பானியின் நிகர சொத்து மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடங்கும். சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஆனந்த் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு $113.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ