சிறு சேமிப்பை அப்படியே டபுள் ஆக்குவது எப்படி? சில ஸ்மார்ட் திட்டங்கள் இதோ..

Investment Schemes Tamil : வாங்கும் சம்பளம் அப்படியே செலவாகி விடுகிறதா? ‘இந்த’ ஸ்மார்ட் உத்திகளை பின்பற்றுங்கள்..  

Written by - Yuvashree | Last Updated : Apr 13, 2024, 06:15 PM IST
  • மாத வருமானம் வாங்குபவர்களுக்கான திட்டங்கள்
  • எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
  • இதோ சில ஈசியான திடங்கள்
சிறு சேமிப்பை அப்படியே டபுள் ஆக்குவது எப்படி? சில ஸ்மார்ட் திட்டங்கள் இதோ.. title=

Investment Schemes Tamil : மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு, அவர்களின் வருமானத்தை மாதா மாதம் சேமிப்பது கடினமான வேலையாக இருக்கும். வரும் சம்பளத்தை பாதி வீட்டு செலவுகளுக்கும், மீதியை தன் சொந்த செலவுக்கும் சிலர் பிரித்து செலவு செய்து அதை சேமிக்க வழி தெரியாமல் திணருவர். “சிறு துளி பெருவெள்ளம்” என்பது அவர்களுக்கு எழுத்து அளவிலேயே இருக்குமே தவிர அதை செயல்படுத்தும் அளவிற்கு வளம் இருக்காது. ஆனால், இந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்தீர்கள் என்றால் கூட பிற்காலத்தில் பெரிய சேமிப்பை கையில் வைத்துக்கொள்ளலாம். இதற்கான சேமிப்பு திட்டங்கள் இதோ. 

நேரடி ஈக்விட்டி:

பங்குகளில் முதலீடு செய்வதால் நிரந்தர வருமானத்திற்கு யாரும் உத்தரவாத கொடுப்பதில்லை. இதில் இருக்கும் அபாயங்களை தெரிந்து கொண்டு எந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டுமோ, அதை சரியான ஆலோசகருடன் கலந்தாலோசித்த பிறகு முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை உங்களுக்கு மாதா மாதம் உபரியாக கையில் நிற்கும் தொகையாக இருக்க வேண்டும். அப்போதுதான், இதில் நஷ்டம் ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்படும் நிதி அபாயத்தை தவிர்க்கலாம். 

கடன் மியூஷுவன் ஃபண்ட்ஸ்: (Debt Mutual Funds)

நிலையான வருமானத்தை பெறுவதற்கு பிரபலமாக இருக்கும் முதலீடுகளுள் ஒன்று மியூஷுவல் ஃபண்ட்ஸ். அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளின் மூலமாக கடன் மியூஷுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யலாம். 

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்:

எந்த நிறுவனத்தின் மியூஷுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம் என்பதை பொறுத்து இதன் வருமானம் அமையும். இருப்பினும், இதில் இருக்கும் சந்தை அபாயங்களை ஆராய்ந்த பிறகு இதில் முதலீடு செய்வது கட்டாயம். 

தேசிய ஓய்வூதிய திட்டம்:

ஓய்விற்கு பிறகு தனக்கு வருமானம் வர வேண்டும் என்று யோசிப்பவர்கள், இதில் இப்போதே முதலீடு செய்வது முக்கியம். இதனை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.1000 செல்த வேண்டும், இந்த திட்டத்தை தொடங்கியிருப்பவர்கள் மாதா மாதம் 1000 ரூபாய் பணம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். 

மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்.. வட்டியிலேயே பம்பர் லாபம் காணலாம்

வைப்பு நிதி (Fixed Deposit):

ஈக்விட்டி அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க தயங்குபவர்கள், இந்த திட்டட்தில் தைரியமாக இறங்கி முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திலேயே உங்கள் முதலீடுகளை பெருக்குவதற்கான ஆப்ஷன்களும் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதனை மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) : 

வரி இல்லாத வருமானத்திற்கும் நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியை தொடங்கலாம். இதிலிருந்து வரும், வரி இல்லாத வட்டி நீண்ட காலங்களுடன் வருமானம் தரும் திட்டமாக கருதப்படுகிறது. நீங்கள் உங்கள் வருமானத்தை சேமித்து, அதை இரட்டிப்பாக்க நினைத்தால் இந்த திட்டம் அதற்கு மிகவும் உகந்தது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

அசையா சொத்துகள் வாங்குதல்..

நிலம் அல்லது வீட்டுமணையாக வாங்குதல், உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரு பெரிய முயற்சியாக கருதப்படுகிறது. மாத வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து, அந்த காலத்தில் 5 ஆயிரத்திற்கு மனை வாங்கியவர்கள், இப்போது லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் இருக்கின்றனர். எனவே, இதற்காக பணத்தை சேமித்து வைத்து, அசையா சொத்துக்களை வாங்குவதும் உங்கள் வருமானத்தை சேமிப்பதற்கான ஒரு சிறந்த முறையாகும். 

மேலும் படிக்க | PF உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... இனி இதை செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News