Nita Ambani Tea Cup Price: இந்தியாவின் மிகப் பிரபலமான பெண் தொழிலதிபர் நிதா அம்பானி ஆவார். ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவிதான் நிதா அம்பானி. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவராகவும் நிதா அம்பானி பதவி வகிக்கிறார். மேலும் நிதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்துள்ளார். குறிப்பாக, கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றில் நிதா அம்பானி அதிக நிதியுதவியை வழங்கி உள்ளார் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

59 வயதான நிதா அம்பானிக்கு, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தற்போது மூவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசியாக ஆனந்த் அம்பானி திருமணத்தின் போது நிதா அம்பானியின் ஆரம்பரமும், எளிமையும் ஒருங்கே மின்னியது எனலாம். அதவாது, எளிமையான வடிவமைப்பை கொண்ட மதிப்பு வாய்ந்த உடைகளை அணிந்து நிதா அம்பானி கவனம் ஈர்த்தார். 


தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவருக்கு மேலும் பொலிவை அளிக்கின்றன. செல்வந்தரான அவர் ஐபிஎல், ஒலிம்பிக், கால்பந்து என அனைத்து போட்டிகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். இது ஒருபுறம் இருக்க, நிதா அம்பானி ஒருநாளில் எதற்கெல்லாம் செலவழிப்பார்கள், எவ்வளவு செலவழிப்பார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.


மேலும் படிக்க | இஷா அம்பானியின் பாரிஸ் ஒலிம்பிக் காஸ்ட்யூம்... அந்த உடையின் விலை என்ன தெரியுமா?


அந்த வகையில், நிதா அம்பானிக்கு தினமும் ஒரு நிலையான பழக்கவழக்கம் உள்ளது. முன்னரே சொன்னது போல் அவர் எளிமையும், சொகுசும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார். அவர் ஜப்பானில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டீ கோப்பையில்தான் தேநீர் அருந்துவாராம். அந்த கோப்பையை மிகவும் பழம்பெருமை கொண்ட நோரிடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஒவ்வொரு கோப்பையிலும் தங்கத்தாலான வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கும். இது ரூ.3 லட்சம் வரை வரும் என கூறப்படுகிறது. மொத்த கோப்பை செட்டின் விலை 1 கோடியே 50 லட்சமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதேபோல் நிதா அம்பானி மிகுந்த ஆரம்பரமான பொருள்களையே பயன்படுத்துவார். குறிப்பாக உயர் ரக வாட்ச்கள், காலணிகள், ஹேண்ட்பேக்குகள் ஆகியவற்றில் பெரிய பெரிய பிராண்டுகளை நிதா அம்பானி பயன்படுத்துகிறார். அதிலும் Bulgari, Cartier, Gucci உள்ளிட்ட பிராண்டுகளை சொல்லலாம். அதேபோல் நிதா அம்பானியும் ஆடைகளும் அதிக மதிப்பு வாய்ந்தவை ஆகும். ஒருமுறை ரூ.40 லட்சத்திற்கு நிதா அம்பானி ஒரு சேலையை அணியிருந்தார். 


இதில் நிதா அம்பானி அவரது மகள் இஷா அம்பானி மிஞ்சிவிட்டார். ஒருமுறை, லெஹங்கா ஒன்றை இஷா ரூ.90 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. நிதா அம்பானியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கலாம். அவரது கணவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.


மேலும் படிக்க | 9 லட்சம் மதிப்புள்ள இஷா அம்பானி உடை!அப்படி என்ன ஸ்பெஷல்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ