இஷா அம்பானியின் பாரிஸ் ஒலிம்பிக் காஸ்ட்யூம்... அந்த உடையின் விலை என்ன தெரியுமா?

Isha Ambani Costume: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இஷா அம்பானி அணிந்து வந்த ஆடையின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 1, 2024, 08:59 PM IST
  • IOC இந்திய பிரதிநிதியா நிதா அம்பானி மீண்டும் தேர்வானார்.
  • இஷா அம்பானியும் பாரிஸ் வந்துள்ளார்.
  • புதுமணத் தம்பதி ஆனந்த் - ராதிகா ஜோடியும் பாரிஸ் வந்துள்ளது.
இஷா அம்பானியின் பாரிஸ் ஒலிம்பிக் காஸ்ட்யூம்... அந்த உடையின் விலை என்ன தெரியுமா?

Isha Ambani Costume In Paris Olympics: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் அம்பானி குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய பிரதிநிதியாக நிதா அம்பானி மீண்டும் தேர்வாகியிருந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பல போட்டிகளில் நிதா அம்பானி - முகேஷ் அம்பானி இணையை பார்க்க முடிகிறது. அவர்களுடன் புதுமணத் தம்பதிகளான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் பிரமல் - இஷா அம்பானி இணையரையும் பார்க்க முடிந்தது. 

Add Zee News as a Preferred Source

இதில் மற்ற அனைவரின் உடைகளை விட இஷா அம்பானியின் உடை மட்டும் தனியாக தெரிந்தது. மேலும், அந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது ஒருபுறம் இருக்க அந்த உடையின் விலைதான் பலரையும் மேலும் கவர்ந்திருக்கிறது எனலாம். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வந்தபோது இஷா அம்பானி வெள்ளை நிற மிடி உடையை அணிந்திருந்தார். இந்த ஆடை பிரபல 'Hill House Home' பிராண்டின் உடையாதாகும். இந்த ஆடை Ellie Nap Dress இணையதளத்தில் விற்கப்பட்டு வருகிறது. இந்த ஆடை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 ஆயிரத்து 448 ஆகும். 

வெள்ளை மிடி ஆடை

இஷா அம்பானியின் இந்த வெள்ளை மிடி ஆடை என்பது சதுரமான நெக்லைன் கொண்டிருக்கிறது. ஆடை முழுவதும் எலாஸ்டிக் தன்மை கொண்டிருக்கிறது. இந்த ஆடையில் பச்சை, இளஞ்சிவுப்பு, நீலம் ஆகிய நிறத்தில் பூ வேலைப்பாடுகளும் இடம்பெற்றிருந்தன. இது இஷா அம்பானியின் ஆடையை மேலும் மேருகேற்றியது. இந்த ஆடையில் அவர் எளிமையான காலணிகள், வைரத் தோடு ஆகியவற்றை அணிந்திருந்தார்.

 

மேலும் படிக்க | தங்கம் போல் ஜொலித்த அம்பானி மருமகள்... ராஜ கம்பீரத்துடன் நிதா அம்பானி - ரிசப்ஷென் காஸ்ட்யூம் இதோ!

முகேஷ் அம்பானி - நிதா அம்பானி இணையரின் இரட்டை குழந்தைகள் இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆவார். இவர்களை தொடர்ந்து ஆனந்த் அம்பானி இளைய மகன் ஆவார். இதில் சமீபத்தில் ஆனந்த் அம்பானிக்கு நடந்த பிரம்மாண்ட திருமண விழாவை உலகமே திரும்பிப் பார்த்தது. ஜூலை 12, 13, 14 ஆகிய மூன்று நாள்கள் மும்பையில் ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. 

பாரிஸ் ஒலிம்பிக் 2024

அந்த திருமணத்தில் இஷா அம்பானியின் ஆடைதான், மணமகளின் ஆடையைவிட அதிக கவனத்தை பெற்றது என்று சொன்னாலும் மிகை ஆகாது. அந்தளவிற்கு இஷா அம்பானியின் மீதும் அதிக கவனம் இருந்தது. இவருக்கு ஆனந்த் பிரமல் உடன் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் இணையருக்கு கிருஷ்ணா, ஆதியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளும் இரட்டையர்கள்தான். தனது தாயை போலவே இரட்டை குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தைகளை பெற்றதாக இஷா அம்பானி தெரிவித்தார். 

முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்பட பல நகரங்களில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆக. 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 117 இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியா தரப்பில் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது. 

மேலும் படிக்க | இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News