Diwali: தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுவே!
தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் மாறுகிறது. தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுதான்...
பண்டிகைகள் என்பது எப்போது மனதிற்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தரும். தொன்ம நம்பிக்கைகளின் அடிப்படையிலும் புராணங்களின் அடிப்படையிலும் பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
நரகாசுரன் வதம் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடுகிறோம். தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுகிறது.
வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநில சுற்றுவட்டாரங்களில், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் வனவாசத்தை முடித்துவிட்டு ராமசந்திர மூர்த்தியாக ராமர் வீடு திரும்புவதைக் கொண்டாடும் நிகழ்வாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் தீபங்களின் வரிசை தீபாவளி என்று சொன்னால், வட இந்தியாவில் ராமரை வரவேற்க தீபங்களால் நகரமே அலங்கரிக்கப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது.
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணனின் அவதாரத்தில் அவர் நராகாசுரனை கொன்றதன் அடிப்படையில் தென்னிந்திய தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமாவதாரத்தில் ராவணனைக் சம்ஹாரம் செய்து வீடு திரும்பும் ராமனுக்கு வரவேற்பு அளிக்கிறது வட இந்திய தீபாவளி.
ALSO READ | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்
ஆனால், அவதாரங்களின் அடிப்படையில் தீபாவளி கொண்டாடும் காரணங்கள் மாறினாலும், விஷ்ணுவின் அவதாரத்தின் மகிமையை நினைவுபடுத்தும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அமாவாசையன்று கொண்டாடப்படுகிறது. அன்று உலகமே இருளில் மூழ்கியிருக்கும். அதனால் தீபங்களை ஏற்றி ஊரையே ஒளிமயமாக்கி ராமரை வரவேற்கும் தீபாவளி, வட இந்தியாவில் ஆண்டுதோறும் தசரா பண்டிகைக்கு சரியாக 21வது நாள் தான் கொண்டாடப்படும்.
பொதுவாக தென்னிந்திய தீபாவளிக்கும், வட இந்திய தீபாவளிக்கும் ஒரு நாள் வித்தியாசம் உண்டு. நாம் தீபாவளி கொண்டாடும் நாள் வட இந்தியாவில் ‘சோட்டி தீவாளி’ என்று கூறுவார்கள். அதற்கு அடுத்த நாள் தான் வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
திதியும் நாளும் மாறிக் கொண்டே இருந்தாலும் தசராவிற்கு சரியாக 21வது நாள் வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கான காரணம் தெரியுமா?
வட இந்திய தீபாவளியின் கதை தசராவில் தொடங்குகிறது. ராவணனை கொன்று மனைவி ஜானகியை இலங்கையில் இருந்து ராமர் மீட்ட நாள் தசரா. போர் முடிந்ததும் மனைவி, தம்பி லட்சுமணன் புடைசூழ ராமர் இலங்கையில் இருந்து அயோத்தி கிளம்பினார்.
ALSO READ | வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன்
ஸ்ரீராமன் தனது ராணுவத்துடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்ல 504 மணிநேரம் ஆனது என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால் 21 கிடைக்கும். அதாவது இருபத்தி ஒரு நாள், இது என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் இதுதான் உண்மை. இலங்கைக்கும், அயோத்திக்கும் இடையிலான தூரம் 3145 கிலோ மீட்டர். இயல்பான வேகத்தில் நடந்து சென்றால் அதற்கு 504 மணிநேரம் ஆகும். இதை உறுதி செய்கிறது கூகுள் மேப்ஸ்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடும் பாரம்பரியம் உண்டு. இந்திய நாட்காட்டிகளின் படி, நவராத்திரி கொண்டாட்டத்தின் நாட்கள் குறையலாம், ஆனால் தீபாவளி எப்போதுமே தசரா முடிந்த 21வது நாள் தான் வரும்.
ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR