திருப்பதி கோவிலின் வருவாய் குறைவாக வருவதன் கரணம் தெரியுமா?
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் குறைத்து வருவதாக நிர்வாகம் தெரிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏழுமலையான் கோயிலில் கடந்த 2017 ஆண்டு 2.73 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 995 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர்.
பழைய ரூ 500, 1000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு உண்டியல் வருவாய் குறைந்தது.
ரத்து செய்யப்பட்ட பழைய நோட்டுகள் மட்டும் கடந்த ஜனவரிக்கு பிறகு ரூ 48 கோடி பக்தர்கள் செலுத்தியுள்ளதாக செயல் அலுவலர் பேட்டி.
2016 ஆண்டு ரூ 1046 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினார், ரூ 500, 1000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ரூ 48 கோடி ரத்து செய்யப்பட்ட நோட்டுகள் செலுத்தியுள்ளனர்.
சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கப்படும் ரூ 500 விலை கொண்ட வி.ஐ.பி. டிக்கெட் விரைவில் விலை ஏற்றம் செய்யப்படும்.
தேவஸ்தானத்தில் 7000 பேர் பணி புரியும் நிலையில் 44 பேர் இந்து மதம் அல்லாதவர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களை அரசு சார்ந்த மற்ற துறையில் பணியிட மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.