ரேஷன் அட்டை என்பது சாதாரண மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ரேசன் அட்டையில் இருந்து பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிமையானது தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதுபோன்ற சந்தர்ப்பங்களில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்குவோம்? ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவன் வீட்டிற்கு செல்லும்போது, பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெண்ணின் பெயர் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.


திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும்போது, அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டைகளில் இருந்தும் பெயர் நீக்கப்படுவது அவசியம். 


ஒருவரின் பெயர் ஒரு ரேசன் அட்டையில் மட்டுமே இடம் பெறவேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும். அதேபோல் ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.


Also Read | Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?


ஆன்லைன் மூலமாக ரேசன் கார்டில் இருந்து சில நிமிடங்களில் பெயரை நீக்கிவிடலாம்...


தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் இருக்கும் இணையதளத்தில் உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்வு செய்யவும். தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் இந்த குறிப்புகளை கொடுக்கிறோம்.


1.  இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ என்ற ஒரு பகுதி இருக்கும். அதில் உள்ள தெரிவுகளில், `குடும்ப உறுப்பினர் நீக்க' என்பதை க்ளிக் செய்யவும்.


2. திறக்கும் புதிய பக்கத்தில், பழைய ரேஷன் கார்டுடன் இணைந்துள்ள உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.  


Also Read | Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!


3. உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ பதிவிட்டு, ‘பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும். உங்கள் ரேஷன் கார்டின் விவரங்கள் திரையில் தோன்றும்.
4, தொடர்ந்து இடதுபுறத்தில் உள்ள ‘அட்டை பிறழ்வு’ என்பதை க்ளிக் செய்யவும். 
5. பிறகு புதிய கோரிக்கைகள் என்பதை க்ளிக் செய்யவும். 
6. திறக்கும் பக்கத்தில் உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் நியாய விலைக் கடையின் குறியீட்டு எண் ஆகியவை தோன்றும். அதற்குக் கீழே ‘சேவையைத் தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஒரு தெரிவு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.
7. பிறகு, தகுந்த ஆவணத்தை அப்லோடு செய்ய வேண்டும். திருமணமான பெண் அல்லது ஆணின் பெயரையோ நீக்க திருமணச் சான்றிதழை பதிவேற்றவும்.  இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை பதிவேற்றவும். 
8. ‘காரணம்’ தலைப்புக்குக் கீழே உள்ள கட்டத்தில், எதற்காகப் பெயரை நீக்குகிறீர்கள் என்பதை பதிவிடவும். தொடர்ந்து, நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து, `உறுதிப்படுத்துதல்' என்ற தெரிவை அழுத்தவும். 
9.பிறகு, ‘பதிவு செய்ய’ என்று தோன்றும் தெரிவை க்ளிக் செய்யவும். 
10. கோரிக்கை வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டால், பச்சை நிறத்தில் `டிக்' மார்க் திரையில் தோன்றும். 


ALSO READ: Ration Card News: ஸ்மார்ட் அட்டைகளை அச்சிடும் பணி துவங்கியது


அவ்வளவு தான், உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கு விண்ணத்தாகிவிட்டது. ‘விண்ணப்பம் பதிவிறக்கம்’ என்பதை க்ளிக் செய்தால் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாள்களில் உங்களது பெயர் நீக்கம் செய்யப்படும்.


ஓரிரு நாள்கள் கழித்து இந்த இணையதளத்துக்குச் சென்று ‘அட்டை தொடர்பான சேவை நிலை அறிய’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உள்ளே நுழைந்து உங்களது விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துக் கொள்ளலாம். உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்ட உடன், ‘சான்றிதழ் பதிவிறக்கம்’ என்ற தெரிவை கிளிக் செய்து  சான்றிதழை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு அந்தச் சான்றிதழ் தேவைப்படும்.


ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR