சென்னை: அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் பெற மட்டும் அல்லாது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் விண்ணப்பிக்க முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டை.
தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் குடும்ப அட்டைக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.
தமிழக அரசின் 'ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெறுகின்றனர்.
Also Read | Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!
குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேசன் கார்டு 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்களது ரேசன் அட்டை எந்த விதம் என்று தெரியுமா? ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகள் மூலம் அதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
PHH: PHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.
2) PHH - AAY : PHH - AAY குறியீடு ரேசன் கார்டில் இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
ALSO READ: Ration Card News: ஸ்மார்ட் அட்டைகளை அச்சிடும் பணி இன்று முதல் துவங்கியது
3) NPHH: ரேசன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
4) NPHH - s : NPHH - s என்ற குறியீடு உள்ள ரேசன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வங்கலாம், அரிசி மட்டும் கிடைக்காது. இதை பொதுவாக சர்க்கரை கார்டு என்று மக்கள் சொல்கின்றனர்.
5) NPHH - Nc : உங்கள் ரேசன் அட்டையில் NPHH - Nc என்று குறிக்கப்பட்டிருந்தால் இதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.
ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR