Wedding Cake: காஜல் அகர்வால்-கெளதம் கிட்ச்லுவின் திருமண கேக்கில் இருந்த ஆச்சரியம் என்ன?
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லு புதுமணத் தம்பதிகள். அழகான இந்த ஜோடியைப் போலவே அவர்களது திருமண கேக்கும் அழகாக இருப்பதோடு, பிரபலமாகவும் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லு புதுமணத் தம்பதிகள். அழகான இந்த ஜோடியைப் போலவே அவர்களது திருமண கேக்கும் அழகாக இருப்பதோடு, பிரபலமாகவும் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லுவின் திருமணம் இந்த ஆண்டின் மிகவும் ரசிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. கொரோனா வைரஸ் (corona virus) தாக்கம், பாதிப்பு, சோகங்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த இந்த ஆண்டில் மகிழ்ச்சி கொடுத்த செய்தியாக இருந்தது இதுபோன்ற சுவாரசியமான நிகச்சிகள் தான்.
காஜல் அகர்வால் (Kajal Agarwal), மும்பையின் கொலாபாவில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் தனது நீண்டகால நண்பரான கெளதம் கிட்ச்லுவை மணந்தார். அக்டோபர் மாதத்தில் நடந்த திருமணம் குறித்த செய்திகளை Vogue magazine முழுமையாக மக்களுக்கு அளித்தது.
திருமணத்தில் ஜூம் செயலி (Zoom) வழியாக சுமார் 200 பேர் திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது, காஜல் அகர்வால் தனது திருமண புகைப்படங்களை சமூக ஊடங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களில் ஒன்றில், அவரது திருமண கேக்கை பார்க்க முடிந்தது. இரண்டு அடுக்குகள் கொண்டதாக இருந்த கேக்கில் இருந்த மலர்களை அப்படியே உண்ணலாம். அது மட்டுமா? கேக்கில் croquembouche என்ற ஒரு பதார்த்தமும் இருக்கிறது. இது காஜல், கெளதம் இருவருக்குமே மிகவும் பிடித்த இனிப்பு வகை ஆகும்.
எங்களுக்குத் தெரியும், குரோக்கம்பூச் (croquembouche) செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதான வேலையல்ல. தேர்ந்த சமையல் கலைஞர்களால் தான் இந்த croquemboucheஐ பக்குவமாக செய்ய முடியும். இது மிருதுவான பேஸ்ட்ரிகளில் (pastries) சுவையான கிரீம் நிரப்பப்பட்டு ஒன்றன் மீது மற்றொன்றாக கோபுரம் போல அடுக்கப்பட்டிருக்கும். கேரமல் (caramel) கொண்டு அலங்காரம் செய்தால் பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கும் croquembouche, நாவில் எச்சில் ஊறவைக்கும்.
பிரபலமான பிரஞ்சு இனிப்பு (French dessert) வகையான croquembouche, திருமணங்கள், ஞானஸ்நானம் (baptisms) உட்பட விருந்துகளில் பரிமாறப்படும் இனிப்பு ஆகும். தற்போது தயாரிக்கப்படும் நவீன croquembouche, பேஸ்ட்ரிகளை சாக்லேட்டில் தோய்த்து செய்யப்படுகிறது. காஜல் அகர்வாலின் திருமணத்தில், ஒவ்வொரு விஷயமும் பார்த்து, ரசித்து சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த திருமண கேக் உணர்த்துகிறது.
Also Read | கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் என்று Lakshmi Manchu சொன்ன காரணம் தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR