புதுடெல்லி: இன்று Big Boss நிகழ்ச்சியில் எல்லாமே வித்தியாசமாகத் தான் இருந்தது. கமல் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆரம்பித்து ஆவலை தூண்டிவிட்டார். நான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும் என்று அவர் சொன்னதும் வீட்டில் இருந்தவர்களின் முகத்தில் சற்று கலக்கம் தெரிந்தது. வன்முறை தப்புத்தான் என கமல் குறிப்பிட்டது சனம் ஷெட்டி செய்த விவகாரத்தை என்பதை குறிப்பாக பேசினாலும், தெளிவாக புரிய வைத்தார் The Big Boss.
அடுத்த அதிரடி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார்கள் என்பது தான். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறும். அதன்படி இன்று நாமினேஷன் என்று தெரிந்தாலும், 11 பேர் என்பது டூ டூ மச் என்று ரசிகர்கள் அங்கலாய்த்தார்கள். இந்த முறை நாமினேஷன் சற்று வித்தியாசமாக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், தங்களுடன் வீட்டில் தங்கியிருப்பவர்களில் யாரை வெளியேறுவதற்கு நாமினேஷன் செய்ய வேண்டுமோ அவர்களின் போட்டோக்களை தீயில் போட்டு எரித்தனர். இது ரொம்ப ரொம்ப டூ டூ மச்...
புகைப்படங்களை எரித்த போட்டியாளர்கள், தாங்கள் நாமினேட் செய்ததற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறினார்கள். வேல் முருகன், ஆஜித், சோம சேகர், நிஷா, பாலாஜி முருகதாஸ், ரியோ, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் என மொத்தம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர். 
இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சனா தலைவர் என்பதால் அவர் நாமினேஷன் லிஸ்டில் இல்லை. இந்த வாரம் வெளியே போவது தானாகவே இருக்கும் என சுரேஷ் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.   
எது எப்படியோ, இந்த வாரம் திங்கட்கிழமை நாமினேஷன் லிஸ்ட்டில் வழக்கத்தை விட அதிகமானவர்கள் இடம் பிடித்திருப்பது ஒரு வித்தியாசம் என்றால், போட்டோக்களை எரிப்பது வழக்கமில்லா பழக்கம் என்றால் அடுத்த வாரம் யார் இருப்பார்கள்? யார் வீட்டில் இருப்பார்கள்? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்... ஆனால் அர்ச்சனா மட்டும் இந்த வாரம் வெளியேற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.


Read Also | Bigboss 4: நாமினேஷன் குட்டு உடைந்தது? யாரெல்லாம் பட்டியலில் இருந்து தப்பித்தார்கள்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR