திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் குபேரன் என்பது அனைவருக்கும் தெரியும். பெருமாளிடம் இருந்தே வட்டி வசூலிக்கும் உரிமை பெற்ற குபேரனை வழிபட்டால். செல்வம் கொழிக்கும், கடன் தொல்லை தீரும் என்றென்றும் வளமுடன் வாழலாம் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெருமாளுக்கு குபேரன் கடன் கொடுத்தது எப்படி தெரியுமா?
பத்மாவதி தாயாரை காதலித்த திருவேங்கமுடையான், தனது திருமண செலவுகளுக்காக செல்வத்துக்கு அதிபதியான   குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்கவில்லை, வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டு இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.


ஆகாச ராஜன் என்ற மகனின் மகளான பத்மாவதித் தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக வேடம் பூண்டு பூலோகம் வந்தார் ஏழுமலையான். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் பூவுலகில் வாழ்ந்து வந்த மகாலட்சுமியை காதலித்த ஸ்ரீநிவாசன், திருமணம் செய்துக் கொள்ள ஆகாசராஜனிடம் வேண்டுகோள் விடுத்தார். தனது மகளை மணம் முடித்துத் தர வேடன் வேடத்தில் இருந்த ஸ்ரீநிவாசனிடம்  கோடிக்கணக்கில் வரனிடம் தட்சணை வேண்டினார் மன்னன்.


Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம்


மகாலட்சுமியான பத்மாவதியை மணம் முடிப்பதற்காக, வேடன் ஸ்ரீநிவாசன், குபேரனிடம் இருந்து ஆயிரம் கோடி பொற்காசுகளை கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே அந்த கடன் பத்திரத்தின் நிபந்தனை. அதனால் தான் பெருமாள் இதுவரை வட்டி மட்டும் கட்டி வருகிறார். அசல் கடனை அடைக்க முடியாமல் கடனாளியாக இருக்கிறார்.


அதனால் தான், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை தரப்படுகிறது. இதற்கென தனி அதிகாரி கோவில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.


குபேரனின் சகோதரர்கள் யார் தெரியுமா> ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் உண்டு. விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர் குபேரன்,  குபேரனின் மனைவி சித்திரலேகா. குபேரனுக்கு , நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உண்டு.


Also Read | திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியம்


சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். எனவே எண்திசை பாலகர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றார் குபேரன். குபேரரின் சிவபக்தியை மெச்சிய   சிவபெருமான்  செல்வதினை நிர்வகிக்கும் சுவர்ண பைரவர் என்ற பொறுப்பினை தந்தார். [1]
குபேரன் பிறந்த நட்சத்திரம்: பூசம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குபேரனை வழிபட்டால், எல்லா சுகங்களையும் பெற்று வளமாக வாழலாம்.


புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு குபேரனின் பெயர் வைஸ்ரவணா. ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று அழைக்கின்றனர்.


இதன் அடிப்படையில் தான் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கின்றனர். குபேரனின் பார்வை நம் மீது பட்டால், அருளும் பொருளும் செல்வமும் செல்வாக்கும் புகழும் சேரும். இதைத்தவிர, குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.  


Also Read | திருப்பதி தெய்வத்தின் பக்தி உலா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR