சிகிச்சைக்காக 72 மணிநேரம் நிறுத்தப்பட்ட இளம்பெண்ணின் இதயம்!
சீன மருத்துவர்கள் இளம் பெண் ஒருவரின் இதயத்துடிப்பை சுமார் 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்....
சீன மருத்துவர்கள் இளம் பெண் ஒருவரின் இதயத்துடிப்பை சுமார் 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்....
சீனாவில் உள்ள ஃப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் முதலில் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் எதையும் காணாததால், மருத்துவர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.
இந்த அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு இருக்கக்கூடாது என்பதற்காக இதயத்தில் உள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சையைத் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைத்து விட்டனர்.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்திவைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.