இளைஞரின் வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை நீக்கி சாதனை படைத்த மருத்துவர்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமாச்சலப்பிரேதசம் மாநிலத்தின் மாண்டி நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக 35 வயதான நபர் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். பின்னர், வயிற்றில் இருக்கும் பொருட்களை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்த்த மருத்துவர்களுக்கே தலை சுற்றியுள்ளது. நோயாளியின் வயிற்றில் 8 ஸ்பூன்ஸ், 1 கத்தி, 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அறுவை சிகிச்சை செய்து அந்த பொருட்களை அகற்ற முடிவு செய்துள்ளனர்.


தற்போது, அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரன மனிதர்களால் ஸ்பூன், கத்தி ஆகியவற்றை விழுங்க முடியாது. நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.