பெட் விங்மேன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், டேட்டிங் செயலிகளில் செல்ல நாயுடன் சுயவிவரப் படத்தை வைத்திருப்பவர்கள் வலதுபுறமாக ஸ்வைப் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படி, ஒருவரை கவர நாயை செல்லபிராணியாக வளர்ப்பது உதவும் என்பது பலருக்கும் புதிய விஷயமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பது அபரிமிதமான மகிழ்ச்சியையும் புதிய அனுபவங்களையும் ஒருவருக்கு தருகிறது. மேலும் ஒரு செல்ல நாயை வைத்திருக்கும் போது, அது அவர்களின் விசுவாசம் மற்றும் அளவற்ற அன்பை பொழியும் என்பது பலருககும் தெரியும். இது, தோழமை உட்பட பல நன்மைகளைத் தருகிறது ஒருவருக்கு தேடி தருகிறது. 


நாய்கள் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு மூலம் நமது உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கின்றன, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கின்றன. அவை மன அழுத்தத்தையும் தனிமையையும் குறைக்கும் நன்மைகளையும் செய்கின்றன. ஒரு நாயுடனான பிணைப்பு சமூக தொடர்புகளை மேம்படுத்துவதோடு பொறுப்புணர்வு உணர்வையும் ஒருவருக்குள் உருவாக்கும். நாயை வளர்ப்பதன் மூலம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில நன்மைகளை பார்க்கலாம். 


மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? ‘இந்த’ மாற்றங்களை மட்டும் செய்யுங்கள்!


நாயை வளர்ப்பது உங்கள் மூளையை சார்ஜ் செய்யும்:


ப்ளோஸ் ஒன் என்ற நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், நாய்களை தடவி கொடுப்பதோ அல்லது தட்டிக்கொடுப்பதோ நமது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால், நமது தலையில் உள்ள ஃப்ரண்டல் கார்டெக்ஸ் என்ற மண்டலம் அலர்டாகுமாம். இந்த மண்டலம் தான், நாம் என்ன நினைக்கிறோம் என்ன உணர்ச்சியை எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு விலங்குடன் நாம் பேசுகையில், நமது உணர்ச்சிகளும் நல்ல முறையில் எழுச்சி பெறும் என கூறப்படுகிறது. 


நினைவாற்றலை தக்க வைத்துக்கொள்ளும்:


பறவை, முயல், மீன், பூனை, நாய் போன்ற செல்லபிராணிகளாக வளர்ப்பதால் நமது நினைவாற்றலை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களை வளர்ப்பதால் நமக்கு பொருப்புகள் அதிகமாவதாகவும், இதனால் நமது நினைவாற்றல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும், நான்கைந்து வருடங்கள் நாய்களை வளர்ப்பவர்கள் அதிகளவில் நினைவாற்றல் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


நாய்கள் வளர்ப்பது இதயத்திற்கு நல்லது:


1950 மற்றும் 2019 க்கு ஆண்டுக்கு இடையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செல்ல நாய்களை வைத்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. நாய் உரிமையாளர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திற்கு சிறந்த ஆதரவாக உள்ளதாம். எனவே, ஒரு நாயை வைத்திருப்பது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 


நாய்களால் மனிதர்கள் கடினமான நேரங்களில் சமாளிக்க முடியும்:


நெருக்கடியான நேரங்களில் மனரீதியாக நம்மை மீட்கும் சக்தி வளர்ப்பு நாய்களுக்கு உண்டு என கூறப்படுகிறது.  ஒரு பிரபல பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், பி.டி.எஸ்.டி நோயால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், நாய்களை வளர்க்க ஆரம்பித்த பின்னர் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. ஒரு செல்ல நாய் வைத்திருப்பது அவர்களின் PTSD அறிகுறிகளை கணிசமாகக் குறைந்ததாகவும் அவர்கள் மேம்பட்ட சமாளிக்கும் திறன்களைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


கவர்ச்சிகரமானவராக மாற்றும்:


பொறுப்புணர்வுடன் இருப்பவர்களை பார்த்தால் அனைவருக்குமே பிடிக்கும். இவர்களால், பலர் ஈர்க்கப்படுவர். அதனால், ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அதற்கான தகுதி உங்களுக்கு இருந்தால், நாய் வளர்க்கவும். 


மேலும் படிக்க | இருமல் நிற்கவே மாட்டேங்குதா? ‘இந்த’ வைத்தியம் செய்து பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ