கடந்த சில வருடங்களாக, உலகமே டிஜிட்டல் பயமாகி வருகிறது. எங்கு திரும்பினாலும் டெக்னாலஜி இருக்கும் இந்த சமயத்தில், இளம் தலைமுறையினருக்கு புதிது புதிதாக பிரச்சனைகளும் முளைக்கின்றன. அதில் ஒரு பெரிய பிரச்சனை, ஆண்மை குறைவு. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மன அழுத்தம் மற்றும் குறைவான குடல் இயக்கம் பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நைட் ஷிஃப்டால் ஆண்மை குறைவு ஏற்படுமா? 


இப்போதைய இளைஞர்கள் பலருக்கு ஹெல்தியான வாழ்க்கை முறை குறித்த புரிதல் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் தங்களை சுற்றி இருக்கும் சூழல்களினால், அவர்களால் அந்த ஆரோக்கிய வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. அப்படி, வேறு வழி தெரியாமல் பல இளைஞர்கள் செய்யும் ஒரு செயல், இரவு நேர ஷிஃப்ட் வேலை. ஐடியில் வேலை செய்பவர்கள் இந்த இரவு நேர ஷிஃப்ட் வேலைகளால் பெரிதும் ஆரோக்கியத்தை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 


இரவு நேர ஷிஃப்ட் மட்டுமே, ஆண்மை குறைவுக்கு காரணமாகி விடாது. ஆனால், ஆண்மை குறைவு ஏற்படும் காரணங்கள் உடலில் உருவாக, இந்த இரவு நேர வேலைகள் வழிவகுக்கின்றன. உடலின் ஆரோக்கியம், நாம் தூங்கும் அளவையும், எடுத்துக்கொள்ளும் உணவுகளையும், அந்த உணவை எந்த நேரத்தில் எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தும் அமைகிறது.


இரவு நேரத்தில் வேலை செய்பவர்களின் தூக்க நிலை மாறுவதால் மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படலாம். இதனால், அவர்களின் உடலின் ஆற்றலிலும் மாற்றங்கள் ஏற்படும். வாழ்வியல் சூழலும், சர்காடியன் ரிதம் எனப்படும் உடல் நிலையும்மாறுவதால் இது உடலில் பலவித ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. 


மோசமான தூக்கம் மற்றும் அதிகரித்த மன சோர்வு அதிகரித்து லிபிடோ ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கும், இது பாலியல் செயல்பாட்டை பாதிக்கலாம். இதைப் பற்றி நைட்ஷிஃப்டில் வேலை பார்ப்பவர்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றை கையாளலாம். அதே போல, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துவதும் உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துறைக்கின்றனர். அவர்கள், தங்களின் நிலை பற்றி ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவர்களின் நலன் பெற ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 


நைட் ஷிஃப்டில் வேலை பார்ப்பவர்கள் தங்களின் உடலை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்?


தூக்கம் அவசியம்:


இருளான அரையில் கொஞ்சம் கூலான சூழலில் தூங்குவது அவசியம் ஆகும்.


கருப்பு நிற ஸ்க்ரீனை வாங்கி, அரையின் ஜன்னல்களில் மாட்டிவிட வேண்டும். அப்போதுதான் தூக்கம் கெடாமல் இருக்கும். 


லீவ் நாளிலும் கூட சரியான நேரத்தில் தூங்கி எழ உடலை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | இட்லி சாப்பிட்டு ஒருவர் உயிரிழப்பு - உணவு தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது?


ஆரோக்கியமான உணவுகள்:


வீட்டில் சமைத்த உணவை பெரும்பாலும் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 


உங்கள் ஷிஃப்ட் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதில் இருந்து தவிர்க்க வேண்டும். 


நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.


தினசரி உடற்பயிற்சி:


வேலைக்கு செல்பவர்கள் செல்லாதவர்கள் என அனைவருமே நன்றாக உடற்பயிற்சி செய்ய வெண்டும். 


மேலும் படிக்க | உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ