நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ உணவிற்கு அற்புதமான மணம் தரக்கூடியது. அது மட்டுமின்றி உன்னதமான மருந்தாகவும் உள்ளது. குருமா, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் அன்னாசி பூ கட்டாயம் இடம் பெற்று இருக்கும். ஆங்கிலத்தில் இதனை ஸ்டார் அனீஸ் என்று கூறுவார்கள்.
நாம் அன்றாட உணவுகளில் நட்சத்திர சோம்பு சேர்த்து பயன்படுத்தும் போது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அன்னாசிப் பூ பார்ப்பதற்கு நட்சத்திர வடிவில் இருக்கும் என்பதால், அதனை ஸ்டார் மசாலா என்றும் அழைப்பார்கள்.
நட்சத்திர சோம்பு மிகவும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு மசாலா. இதில் ஆண்டி ஆக்சிடென்ட் மட்டுமல்லாது வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் திறன் நட்சத்திர சோம்பிற்கு உண்டு. சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாக உள்ளது நட்சத்திர சோம்பு.
அன்னாசிப்பூவில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால், உடல் பருமன் கொண்டவர்கள் இதனை உணவுடன் சேர்த்து கொள்ளவதும், இதன் நீரை அருந்துவதும் பலன் தரும்.
செரிமானத்தை தூண்டும் ஆற்றல் கொண்ட நட்சத்திர சோம்பு வயிறு உப்புசம் உள்ளிட்ட அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய உதவும்.
நட்சத்திர சோம்பில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது பல வகையான பாக்டீரியா அல்லது வைரஸ்களின் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.
முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடிய ஆற்றல் கொண்டது அன்னாசிப்பூ. மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
உயர் ரத்தம் அழுத்த பிரச்சனைகளையும், இதய பாதிப்பையும் சரி செய்யும் திறன் கொண்டது நட்சத்திர சோம்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
தாய்ப்பாலை பெருக்கக் கூடிய அற்புத சக்தி உடையது. பாலூட்டும் தாய்மார்கள் இதனை தினசரி சாப்பிட்டு வர நல்ல பலனைப் பெறலாம்.
நட்சத்திர சோம்பு அருமருந்து என்றாலும், ஒரு நாளைக்கு இரண்டு கிராமுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. இதை விட அதிக அளவில் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.