டாலருக்கு எதிராக ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. ரூபாயின் இந்த வீழ்ச்சியின் தாக்கம் தற்போது பொது மக்களையும் பாதிக்கும். இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் ஜூன் முதல், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொலைக்காட்சி, வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் போன்ற நுகர்வோர் ஆகிய மின்னணு பொருட்களின் விலைகள் 3 முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூலப்பொருள் பற்றாக்குறையால் பணவீக்கம் அதிகரிக்கும்


இந்தச் செய்தி குறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், உற்பத்திச் செலவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட, நிறுவனங்கள் பொருட்களில் விலையை அதிகரிக்கலாம்.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளது. முக்கியமான உதிரிபாகங்கள் இறக்குமதியை தொழில்துறை பெரிதும் நம்பியிருப்பதால், உற்பத்தி சிக்கல்கள் அதிகரித்துள்ளன.


மேலும் படிக்க | PPF திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், ரூ.18 லட்சத்துக்கு மேல் பெறலாம்


அதே நேரத்தில், பணவீக்கம் அதிகரிப்பதற்கு கோவிட் தொற்று நோய் பரவலும் ஒரு காரணம் என்றும் நம்பப்படுகிறது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றினால், விதிக்கப்பட்ட கடுமையான லாக்டவும் காரணமாக, பல கப்பல்கள் ஷாங்காய் துறைமுகத்தில் நிற்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், உதிரிபாகங்கள் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்து, உற்பத்தியாளர்களின் கையிருப்பு குறைந்து வரும் நிலையில், அவற்றின் விலையும் பெருமளவில் உயரும் வாய்ப்பு உள்ளது.


நிபுணர்களின் கருத்து


அதே நேரத்தில், சீமாவின் தலைவர் எரிக் ப்ரெகன்சா கூறுகையில்,  “மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து வருகிறது, இப்போது அமெரிக்க டாலர் வலுவடைகிறது.  பின்னர் ரூபாய் பலவீனமடைகிறது... இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து உற்பத்தியாளர்களும் குறைந்தபட்ச லாபத்தைப் பெற வேண்டும் என்ற நிலையில் ஜூன் முதல், மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை விலை உயரலாம்” என தெரிவித்தார்.


மேலும் படிக்க | 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான், ஆதார் அவசியம்: CBDT


மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR