குட்டி குழந்தையை கண்டு சிரிக்கும் டால்பினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், குட்டி குழந்தை செய்யும் குறும்பை கண்டு சிரிக்கும் டால்பினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சுமார் 24 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை @knowIedgehub என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், குறுநடை போடும் குழந்தையின் தந்தை தனது குழந்தையை தூக்கி டால்பின் நீந்துவதை போன்று குழந்தையை மேலும் கீழுமாக ஆடுகிறார்... இதை கண்ட டால்பின் இவர் செய்வதை கண்டு வாயை திறக்கிறது. மீண்டும் அவர் அதே போன்று செய்கிறார், டால்பினும் மீண்டும் அதே போல் சிரிக்கிறது. இந்த வீடியோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 



இந்த வீடியோக்கு, "ஒரு டால்பினை சிரிக்க வைக்கும் குறுநடை போடும் குழந்தை" என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், இதற்கு நெட்டிசங்கள் தங்களின் கருத்துக்களையும் பாடிவிடு வருக்கின்றனர்.