இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்
Night Sleep, Health Risk ; இரவு நேர தூக்கத்தை தவிர்த்தால் மூளை பக்கவாதம் மூலம் சர்க்கரை நோய் வரும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
யாரெல்லாம் இரவு தூக்கத்தை தவிர்க்காமல் இருகிறார்களோ, அதுவும் இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொண்டு முன்கூட்டியே படுகைக்கு செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பார்கள். 8 முதல் 10 மணி நேரம் வரை இரவு நேர தூக்கத்தை எடுப்பது அவசியம். ஆனால், சில காரணங்களால் பலரால் இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. இது பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் சிலர் அறிவதில்லை. தூக்கம் உடலுக்கு அநாவசியம் என்ற எண்ணமே இதற்கு காரணம். அவர்கள் எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தூக்கம் உடலுக்கு அவசியம், அத்தியாவசியம்.
இரவு நேர தூக்கமின்மை
இரவு நேரம் தூங்காமல் இருப்பது குறித்து வெளியாகியிருக்கும் ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலர் இரவு நேரம் தூங்காமல் இருப்பதை பெருமையாக கூறிக் கொள்ளும் இன்றைய வாழ்க்கை சூழலில், இப்போது ஒரு புதிய ஆய்வில், இரவில் போதுமான மற்றும் நல்ல தூக்கம் இல்லாதது, மூளை பக்கவாதம், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. உடல் செயல்பாடு மட்டுமின்றி, 24 மணி நேரத்திலும் சரியான தூக்கம் மற்றும் விழிப்பு நிலையும் நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பேன்-ஈறு தொல்லையை போக்க ஒரே வழி! இதை செய்து பாருங்கள்..
தூக்கமின்மை ஆபத்துகள்
ஒவ்வொரு இரவும் 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். தூக்கமின்மை இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலில் இன்சுலின் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை, இது டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
என்னென்ன நோய்கள் வரும்?
அதுமட்டுமின்றி, தூக்கமின்மை பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது, இது அதிகமாக சாப்பிடும் போக்கை அதிகரிக்கும். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு மூளை பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை உடலில் வீக்கம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். எனவே ஆரோக்கியமான தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மருத்துவமனைக்கு செல்லும் வழக்கம் இருக்காது.
தூங்காமல் இருப்பவர்கள் யார்?
டிரைவர்கள், ஐடி ஊழியர்கள் என பெரும்பாலும் எல்லா தொழிகளிலும் இரவு நேர பணிக்கு செல்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் இரவு நேர வேலைக்கு செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது என்பது முறையான ஹார்மோன் சுரப்புக்கு வழிவகுத்து கடைசியில் வாழ்க்கையே பிரச்சனையாகும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இதனை உணர்ந்து ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுத்து நலமாக வாழ முயற்சி செய்யுங்கள். இரவுநேர தூக்கமே ஆரோக்கியத்துக்கு நன்மையானது. பகல்நேர தூக்கும் ஒருவருக்கு மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளையே கொண்டு வர வழிவகுக்கும். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் இரவு நேர தூக்கத்தை ஒருபோதும் தவிர்த்துவிடாதீர்கள்.
மேலும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, 6 லட்சம் பெறுவது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ