வாழ்க்கையில் பிரச்சனைகள் விடாமல் துரத்துகிறது என பலர் புலம்புவதைக் கேட்கலாம். தினமும் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்வதால் மனம் உடைந்து போயிருப்பார்கள். பிரச்சனைகள் விடாமல் துரத்தும் போது, மன அழுத்தமும் உண்டாகலாம். ஆனால், கவலை வேண்டாம், அதற்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. இதனால் நீங்கள் இந்த சிக்கல்களிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிவில்லாத தொடர்கதையாக தொடர்ந்தால், நீங்கள் அதற்கு சிவனை பூஜித்தால் போதும். திங்கள்கிழமை காலை சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு பாலால் அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகத்தை செய்யும்போது, ​​“ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். இதேபோல், ஒவ்வொரு திங்கட்கிழமையும்  செய்து வந்தால், சிவனின் அருளால், உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக தானாகவே முடிவுக்கு வந்து விடும்.


ALSO READ | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சி பொங்க உதவும் வாஸ்து குறிப்புகள்..!!!


அதோடு பிரதோஷ காலங்கள் சிவனுக்கு மிகவும் உகந்தது. 
பிரதோஷ காலம் என்பது, ஒவ்வொரு மாதத்திலும், வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு திரியோதசி திதி அன்று, மாலை 4.20 முதல் இரவு 7 மணி வரை உள்ள கால நேரம் ஆகும்.


அந்த நாட்களில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்கு சென்று சிவனை வணங்கினால் தோஷங்களும், பாவங்களும் நீங்கி, வாழ்வில், மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.


வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தாலும், நீங்கள் குடும்பத்திலும் பணியிடத்திலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறையை ஆற்றலை அகற்றவும், சிக்கல்களிலிருந்து விடுபடவும் 
ஞாயிற்றுக்கிழமை இரவு, பசுவின் பாலை ஒரு கிளாஸில் நிரப்பி, தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கவும். அது உங்கள் மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளையும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் எடுத்து விடும். பின்னர் காலையில், முதலில், இந்த பாலை கருவேல மரத்தின் வேரில் ஊற்றவும். இது உங்கள் வீட்டில் உள்ள  எதிர்மறையை சக்தியை நீக்கி, பிரச்சனை தீர வழிவகுக்கிறது.


ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR