புதுடெல்லி: PM Kisan Scheme: PM Kisan Yojana (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகள் 10வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இத்திட்டத்தின் 9 தவணைகள் விவசாயிகளின் கணக்கில் இதுவரை வந்துள்ளன. இம்முறை இத்திட்டத்தின் இரண்டு தவணைகள் அதாவது இரட்டிப்பு பணம் பல விவசாயிகளும் வர உள்ளனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவசாயிகளுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்
பிரதம மந்திரி கிசான் யோஜனா (PM Kisan) திட்டத்தின் கீழ், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 9வது தவணை ஒரு சில விவசாயிகளின் (Farmers) கணக்கில் கிரெடிட் செய்யப்படவில்லை. அத்தகைய விவசாயிகளின் கணக்கில் தற்போது 9வது மற்றும் 10வது தவணை பணம் ஒரே நேரத்தில் கிரெடிட் செய்யப்படும்.


ALSO READ:Shocking: இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் PM Kisan தவணை கிடைக்காது


இந்நிலையில், தற்போது இந்த விவசாயிகளில் கணக்கில் ஒத்துமொத்தமாக 4,000 ரூபாய் கிரெடிட் செய்யப்படும். ஆனால், செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன் இந்தத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


10வது தவணை விரைவில் வரவிருக்கிறது
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளின் கணக்கில் 10வது தவணை பணம் விரைவில் கிரெடிட் செய்யப்பட உள்ளது. பல ஊடக அறிக்கைகளின்படி, இந்த பணம் டிசம்பர் 15 வரை விவசாயிகளின் கணக்கில் கிரெடிட் செய்யப்படலாம்.


இந்த முறையில் உங்கள் பெயரை சரிபார்க்கவும்
1. இதற்கு, முதலில் நீங்கள் PM Kisan Yojana இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in க்குச் செல்லவும்.
2. பின்னர் அதன் முகப்புப் பக்கத்தில் நீங்கள் விவசாயிகள் கார்னர் என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.
3. விவசாயிகள் கார்னர் பிரிவில், பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
4. பின்னர் நீங்கள் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இதற்குப் பிறகு, 'Get Report' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. இதற்குப் பிறகு பயனாளிகளின் முழுமையான பட்டியல் தோன்றும், அதில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம்.


ALSO READ:PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR