சட்டபிரிவு 377 நீக்கத்தினை கொண்டாடும் வகையில் பிரபல ஆணுறை நிறுவனம் சிறப்பு போஸ்டரினை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கை எதிராக சட்டப்பிரிவு 377 உருவாக்கப்பட்டது. இந்த சட்ட பிரிவு படி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். 


ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓரின சேர்க்கை அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் உறவு என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த சட்டப்பிரிவு நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. 


இதன்படி கடந்த செப்டம்பர் 6-ஆம் நாள் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377-னை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த வரலாற்று தீர்ப்பினை நாடுமுழுவதிலும் இருந்து பல இயக்கங்கள் கொண்டாடி வருகின்றனர். நாடுமுழுவதிலும் இந்த தீர்ப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இத்தீர்ப்பால் இந்திய கலாச்சாரம் பாதிக்கும் என பலர் கருத்து தெரிவத்து வருகின்றனர்.



இந்நிலையில் பிரபல ஆணுறை நிறுவனமான Durex நிறுவனம், இந்த வரலாற்று தீர்ப்பினை கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டரின் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரானது LGBT சமூகத்திற்கான மரியாதையின் அடையாளம் என பலரும் பாராட்டி வருகின்றனர்!