புதுடெல்லி: இந்த கொரோனா காலத்தில், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ உங்களுக்கு பணம் ஈட்டுவதற்கான ஒரு சிறந்த வழியைக் கொண்டு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் இருந்தபடியே மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எளிதாக சம்பாதிக்கக்கூடிய ஒரு சிறந்த வணிக யோசனையை (Business Idea) பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இது பணம் ஈட்டுவதற்கான மிகவும் பாதுகாப்பான வழியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். நாட்டின் முதல் பொதுத்துறை வங்கியான SBI (இந்தியன் ஸ்டேட் வங்கி) உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.


SBI ஏடிஎம் உரிமம்


SBI வங்கியின் ஏடிஎம் ஃப்ரான்சைஸை (SBI ATM Franchise) எடுத்து நீங்கள் எளிதாக சம்பாதிக்கலாம். எந்த வங்கியின் ஏடிஎம்-மும் வங்கி சார்பாக நிறுவப்படவில்லை. அவற்றுக்கென ஒரு தனி நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தம் வங்கியால் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் பல இடங்களில் ஏடிஎம்களை நிறுவும் பணியை செய்கிறது. ஏடிஎம் உரிமையை எடுத்தால், அதன் மூலம் அவ்வாறு பணம் ஈட்ட முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்.


எஸ்பிஐ ஏடிஎம் ஃப்ரான்சைஸ் உரிமையை பெறுவதற்கான நிபந்தனைகள் இவை
1. எஸ்பிஐ ஏடிஎம் ஃப்ரான்சைஸ் உரிமையை பெற, நீங்கள் 50-80 சதுர அடி இடத்தை வைத்திருக்க வேண்டும்.
2. மற்ற ஏடிஎம்களிலிருந்து அந்த இடத்தின் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும்.
3. இந்த இடம் தரை தளத்திலும் (ground floor) நல்ல தெரிவுநிலையுடன் (visibility) கூடிய இடத்திலும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் 24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும். இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் கட்டாயமாகும்.
5. இந்த ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. ஏடிஎம் இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்
7. V-SAT ஐ நிறுவுவதற்கு சொசைடி அல்லது அங்கிருக்கும் அமைப்பிடமிருந்து ஆட்சேபனை ஏதும் இல்லை (No Objection Certificate) என்ற சான்றிதழ் பெற வேண்டும்.


ALSO READ: SBI Cards சூப்பர் செய்தி: அக்டோபர் 3 முதல் பண்டிகை கால cashback offer!


எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் பெற தேவையான ஆவணங்கள்


1. ஐடி சான்று - ஆதார் அட்டை (Aadhaar Card), பான் கார்டு, வாக்காளர் அட்டை


2. முகவரி சான்று - ரேஷன் கார்டு, மின்சார கட்டணம்


3. வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்


4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.


5. பிற ஆவணங்கள்


6. ஜிஎஸ்டி எண்


7. நிதி ஆவணங்கள்


எஸ்பிஐ ஃப்ரான்சைஸ் எடுக்க எப்படி விண்ணப்பிப்பது


எஸ்பிஐ ஏடிஎம் (ATM) உரிமையை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதற்காக, இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் உள்நுழைந்து உங்கள் ஏடிஎம் -க்கு விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ இணையதள முகவரி இதோ:
டாடா இண்டிகாஷ் - www.indicash.co.in


முத்தூட் ஏடிஎம்-www.muthootatm.com/suggest-atm.html


இந்தியா ஒன் ஏடிஎம்-india1atm.in/rent-your-space


எவ்வளவு சம்பாதிக்க முடியும்
இந்த நிறுவனங்களில், டாடா இண்டிகாஷ் மிகப்பெரிய மற்றும் பழமையான நிறுவனமாகும். இது 2 லட்சம் ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டில் ஃப்ரான்சைஸ் உரிமையை வழங்குகிறது. இந்த தொகை திரும்ப வழங்கப்படும். இது தவிர, நீங்கள் ரூ .3 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வகையில், இதில் நீங்கள் மொத்தம் ரூ .5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள். இதில் வரும் வருமானத்தைப் பார்த்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் ரூ .8 மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனையில் ரூ .2 கிடைக்கும். அதாவது, முதலீட்டின் மீதான வருவாய் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை இருக்கும்.


உதாரணத்திற்கு, உங்கள் ஏடிஎம் மூலம் தினமும் 250 பரிவர்த்தனைகள் நடந்தால், அதில் 65 சதவிகிதம் பண பரிவர்த்தனை மற்றும் 35 சதவிகிதம் பணமில்லா பரிவர்த்தனை என்றால், உங்கள் மாத வருமானம் 45 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் இருக்கும். அதே நேரத்தில், 500 பரிவர்த்தனைகளில் சுமார் 88-90 ஆயிரம் கமிஷன் இருக்கும். அதாவது, ஒரு முறை முதலீடு செய்த பிறகு, நீங்கள் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.


ALSO READ: Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR