Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது?

பல வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர சிறப்பு சலுகைகளை கொண்டு வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2021, 05:01 PM IST
  • SBI வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.70% ஆக நிர்ணயித்துள்ளது.
  • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது.
  • கோடக் மஹிந்திரா வங்கி 6.5% வட்டி விகிதத்தில் வட்டி வழங்குகிறது.
Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது? title=

Home Loan Interest Rates of Various Banks: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இந்த தருணத்தில் பல வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களிடையே மலிவான வட்டி விகிதங்களில் வீட்டு கடன்களை வழங்க ஒரு பெரிய போட்டி உள்ளது. இந்த போட்டியால் வாடிக்கையாளர்ளுக்கு நன்மையே கிடைக்கிறது.

பல வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர சிறப்பு சலுகைகளை கொண்டு வருகின்றன. இந்த ஆண்டின் பண்டிகை காலம் இப்போது தொடங்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

SBI அளிக்கும் சலுகை என்ன?

வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (Rate Of Interest) 6.70% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் செயலாக்க கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஊதியம் பெறாத (Non Salaried) வாடிக்கையாளர்களுக்கு வட்டி பிரீமியத்தில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

HDFC வங்கியின் சலுகைகள்

தனியார் வங்கியான எச்டிஎப்சி-யும் (HDFC) இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன்களை மலிவாக வழங்க முடிவு செய்துள்ளது. வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் சில தள்ளுபடியும் வழங்கப்படும். 

ALSO READ: Good News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது 

இந்தியன் வங்கி வழங்கும் சலுகை எவ்வளவு

அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 6.85%-8.00% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும். இதனுடன் 22 முதல் 25 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ-யில் 20 ஆயிரம் செயலாக்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கியின் விகிதங்கள்

ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதம் 6.90% -8.40% ஆக உள்ளது. 23 முதல் 25 ஆயிரம் இஎம்ஐ மீது அதிகபட்சமாக ரூ .10,000 செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும். 

பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதம்

பேங்க் ஆஃப் பரோடாவின் (Bank of Baroda) வட்டி விகிதம் 6.75%-8.60% ஆகும். இந்த வங்கியில் 22 முதல் 26 ஆயிரம் வரையிலான தொகையின் இஎம்ஐ-யில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

LIC Housing Finance 

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance ) தனது வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு 6.90% வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது. இங்கு, வீடு கட்டுவதற்கு, வீடு வாங்குவதற்கு, மனை வாங்குவதற்கு அல்லது வீட்டை பழுதுபார்க்க உங்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி 6.5% வட்டி விகிதத்தில் வட்டி வழங்குகிறது. வங்கி அதன் வட்டி விகிதத்தில் 0.15 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

ALSO READ: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News