எஸ்பிஐ ATM மூலம் மாதம் ரூ.60,000 வரை சம்பாதிக்கலாம்! எப்படி?
எஸ்பிஐயின் ஏடிஎம் மையத்தை அமைக்கும் உரிமைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
பொதுவாக ஏடிஎம் மையங்கள் அனைத்தும் வங்கிகளால் அமைக்கப்படுவதில்லை, வங்கிகளுக்கு ஒப்பந்ததாரர்களாக பணிபுரியும் சில நிறுவனங்கள் ஏடிஎம்களை நிறுவுகின்றது, அத்தகைய நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் ஏடிஎம்களை நிறுவுகின்றன. அந்த சில நிறுவனங்கள் மட்டும் தான் ஏடிஎம் நிறுவும் வேலையை செய்யவேண்டுமா என்றால் இல்லை, நீங்களும் அதனை செய்யலாம். ஏடிஎம் ஒப்பந்ததாரராக இருக்க குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் திரும்பப்பெறும் முதலீட்டில் மாதம் ரூ.60,000 முதல் 70,000 வரை சம்பாதிக்கலாம். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவ டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம், இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எஸ்பிஐயின் ஏடிஎம் மையத்தை அமைக்கும் உரிமைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏடிஎம் கேபினை அமைக்க 50 முதல் 80 சதுர அடி பரப்பளவில் உங்களிடம் இடம் இருக்க வேண்டும், மற்ற ஏடிஎம்களில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் அந்த இடம் இருக்க வேண்டும். மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் ஏடிஎம் அமைக்கப்பட வேண்டும், அந்த பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டும், இதற்கு குறைந்தபட்சம் 1kW மின்சார இணைப்பும் தேவை. ஏடிஎம் கேபின் கான்கிரீட் கூரை மற்றும் செங்கல் சுவர்கள் கொண்ட நிரந்தர கட்டிடமாக இருக்க வேண்டும், நீங்கள் ஒரு சமூகத்தில் வசிக்கிறீர்கள் என்றால், V-SAT ஐ நிறுவுவதற்கு, நீங்கள் சங்கம் அல்லது அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம்.
எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும்போது செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.2 லட்சமும், செயல்பாட்டு மூலதனமாக ரூ.3 லட்சமும் செலுத்தவேண்டும். இந்த தொகை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும், ஆனால் ஒட்டுமொத்த முதலீடு ரூ.5 லட்சம் தான். ஏடிஎம் கேபின் கட்டப்பட்டு மக்கள் அதனை பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, உங்களுக்கு ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.8 மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்பு மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கிடைக்கும்.
எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1) ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பான் கார்டு போன்ற ஏதேனும் அடையாளச் சான்று.
2) ரேஷன் கார்டு அல்லது மின்சார பில் போன்ற முகவரி சான்று.
3) வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக் விவரங்கள்.
4) சமீபத்திய புகைப்படம், சரியான மின்னஞ்சல் ஐடி அல்லது தொடர்பு எண்.
5) ஜிஎஸ்டி எண்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை வைத்து பேங்க் பேலன்சை எவ்வாறு சரிபார்ப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ