இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.


ஈஸ்டர் முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், சென்னை சாந்தோம் பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், கதீட்ரல் தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை ஜெப ஆராதனைகள் நடந்தன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவில் திரளான கிறித்தவர்கள் கலந்து கொண்ட பெருவிழா திருப்பலி நடைபெற்றது.