ITR e-Verification: வருமான வரி தாக்கல் பற்றிய முக்கிய தகவல், UIDAI அளித்த எளிய வழிமுறை இதோ
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
ஆதார் மூலம் ஐடிஆர் மின் சரிபார்ப்பு: நாட்டில் அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள். வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு, முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை மக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆனால், ஆன்லைன் முறையில் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர் இ-சரிபார்ப்பை (ஐடிஆர் இ-வெரிஃபிகேஷன்) செய்வது கட்டாயமாகும். இது இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையானதாக கருதப்படாது. இது இல்லாமல் ஐடிஆர் செல்லாது. ஐடிஆர்-ஐ தாக்கல் செய்த பிறகு மின் சரிபார்ப்பு செய்ய விரும்பினால், ஆதாரைப் பயன்படுத்தலாம்.
யுஐடிஏஐ ட்வீட் செய்து தகவல் அளித்தது
ஐடிஆர்-ன் மின் சரிபார்ப்பு பற்றிய தகவல்களை அளித்து, ஆதார் மூலம் மின் சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது. இதற்கு உங்கள் ஆதாரை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். இதனுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் உள்ளிட வேண்டும்.
மேலும் படிக்க | ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ
ஆதார் அட்டை மூலம் ஐடிஆர்- ஐ சரிபார்க்கும் செயல்முறை இதோ:
- இதற்கு முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இங்கே ‘லிங்க் ஆதார்’ என்ற இணைப்பைத் திறக்கவும்.
- இங்கே ஆதார் எண்ணை உள்ளிட்டு பான் எண்ணைச் சரிபார்க்கவும்.
- இதற்குப் பிறகு உங்கள் பான் மற்றும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.
- ஐடிஆர் தாக்கல் செய்யும் இணையதளத்திற்குச் சென்று ஐடிஆர் படிவத்தை நிரப்பவும்.
- இங்கே சரிபார்ப்பு (வெரிஃபிகேஷன்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.
- ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதன் பிறகு, வெற்றிகரமாக மின் சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளமான ‘ரிடர்ண் சக்சஸ்ஃபுலி இ-வெரிஃபைட்’ என்ற செய்தி திரையில் தோன்றும்.
- இதனுடன் உங்கள் மின் சரிபார்ப்பு செயல்முறை நிறைவடையும்.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய செய்தி: இவற்றை செய்ய மறக்காதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR