புதிய ஐடிஆர் தாக்கல் விதிகள்: நீங்களும் வரி செலுத்தும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக இருக்கும். வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. அதிக நபர்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்காக வருமான வரி தாக்கல் செய்வதற்கான சில வரம்புகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இந்த தகவலை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, இப்போது வெவ்வேறு வருமானக் குழுக்கள் மற்றும் வருமானம் உள்ளவர்களும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதிய விதியின் கீழ், இப்போது அதிகமான மக்களை வரி செயல்முறைக்குள் கொண்டு வர முடியும். இந்த புதிய விதிகள் ஏப்ரல் 21 முதல் அமலுக்கு வரும்.
புதிய விதிகள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்
புதிய விதியின்படி, தொழிலில் விற்பனை, வருவாய் அல்லது டர்ண்ஓவர் 60 லட்சத்துக்கு மேல் இருந்தால், அந்த தொழிலதிபர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். சம்பளம் வாங்குபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தாலும், அவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
ஒரு வருடத்தில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொகை 25,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு டிடிஎஸ் + டிசிஎஸ் வரம்பு ரூ.50,000 ஆக வைக்கப்பட்டுள்ளது.
வங்கி வைப்புகளும் ஐடிஆர் தேவை
- புதிய அறிவிப்பின்படி, வங்கி சேமிப்புக் கணக்கில் 1 வருடத்தில் 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அத்தகைய வைப்பாளர்களும் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- புதிய விதிகள் ஏப்ரல் 21 முதல் அமலுக்கு வரும்.
- புதிய மாற்றங்களால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு அதிகரிக்கும் என்றும், மேலும் அதிகமானோர் வரி அமைப்பில் வருவார்கள் என்றும் அரசு நம்புகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: டிஏ அதிகரிப்பை தொடர்ந்து உயரும் பிற கொடுப்பனவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR