சூரிய ஒளி இல்லாமல் ஈரமான ஆடைகளை காயவைக்க பலரும் முற்பட்டு இருப்போம். சூரிய ஒளி இல்லாத போது, ​​துணிகளை காயவைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சிலர் தங்கள் ஆடைகளை மின்விசிறிக்கு அடியில் வைத்து காய வைத்தாலும், அந்த ஆடைகளில் பூஞ்சை போன்ற துர்நாற்றம் வீசுகிறது. இந்தியாவில் பல வீடுகளில், மக்கள் கைகளால் தான் துணிகளை துவைக்கின்றனர்.  பெரும்பாலும் இயந்திரங்கள் அல்லது ட்ரையர்கள் பயன்படுத்துவதில்லை. பின்னர் ஈரமான துணிகளை காய வைப்பது மிகவும் கடினமான பணியாக மாறும். வீட்டில் திறந்த பீடம் அல்லது மொட்டைமாடி இல்லை என்றால், துணிகளை எங்கு காய வைப்பது என்ற கேள்வி பெரும்பாலும் நம்மை தொந்தரவு செய்கிறது. ஆனால் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் ஈரமான துணிகளை எளிதாக காய வைக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2023: நீங்கள் தவறவிட முடியாத சிறந்த 5 டீல்கள்


பேப்பர் மூலம் காய வைத்தால்


வீட்டின் தரை பகுதி ஈரம் இல்லாமல் இருந்தால், சூரிய ஒளி இல்லை என்றாலும் துணியை துர்நாற்றம் இல்லாமல் காய வைக்க முடியும். இந்த முறையில் துணியை காய வைக்க நீண்ட நேரம் ஆகும் என்றாலும், வெயிலில் காயவைப்பது துணிகள் காய்ந்துவிடும்.  இதற்காக, துணிகளை காற்றோட்டமான திறந்த இடத்தில் தொங்க விடுங்கள். பிறகு பேப்பரை எடுத்து எல்லா பக்கங்களிலிருந்தும் துணிகளை மூடி வைக்கவும். இதற்குப் பிறகு, ஒரு விசிறியை துணிகள் இருக்கும் இடத்தில வைக்கவும்.  இது ஈரமான ஆடைகளின் ஈரப்பதத்தை உறிஞ்சி, துணிகளை விரைவாக உலர்த்தும்.  மேலும், இந்த பேப்பர்கள் துணியை முழுவதும் மூடும்படி இருப்பது அவசியம்.


ஹீட்டர்


மற்றொரு முறையில் துணிகளை காயவைக்க ஹீட்டரை பயன்படுத்தலாம்.  ஹீட்டர் வெப்பத்தில் துணிகளை காய வைத்தால், விரைவில் ஈரப்பதம் இல்லாமல் போகும்.  ஹீட்டரை பயன்படுத்துவதால் கரண்ட் பில் சிறிது அதிகம் ஆகலாம், ஆனால் அவசர தேவைக்கு இவை உடனே தீர்வை கொடுக்கின்றன.  சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்திலும், துணிகளை துர்நாற்றம் இல்லாமல் காய வைக்கலாம்.


வெயிலில் துணிகளை காய வைக்க முடியவில்லை என்றால், வீட்டில் உள்ள கம்பிகளில் காயவைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்த முறையில் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். இந்த முறையில் காலதாமதம் ஆகும் என்றாலும், துணிகள் நன்றாக காயும்.  ஹீட்டர் அல்லது பேன்களை பயன்படுத்த முடியாத போது இவ்வாறு முயற்சி செய்யலாம்.  துணிகளை விரைவாக உலர்த்துவதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு முறை, உங்கள் துணிகளை வாஷிங் மிஷினில் கூடுதல் நேரம் ட்ரையரில் போடுங்கள்.  இதன் மூலம் துணிகள் விரைவாக காயும்.


ட்ரையரில் லைக்ரா, நைலான், அக்ரிலிக், பாலியஸ்டர், விஸ்கோஸ் அல்லது ஸ்பான்டெக்ஸ் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆடைகளை சிறிது நேரம் மட்டும் உலர வைக்கவும்.  உங்கள் ட்ரையர் உடனே துணிகளை உலர வைக்க, ஒவ்வொரு முறை அதனை பயன்படுத்திய பிறகும் நன்றாக சுத்தம் செய்யவும். அழுக்கு மற்றும் வேறு ஏதேனும் குப்பைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  காட்டனில் செய்த துணிகளை காயவைப்பது கடினமாக இருக்கும் மற்றும் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். காட்டன் ஆடைகள் ஈரமாக இருக்கும்போது அவற்றை கொடிகளில் தொங்கவிட்டு உலர்த்துவது  நல்லது. 


மேலும் படிக்க | Business Idea: பண்டிகை காலத்தை மிஸ் பண்ணாதீங்க...கை கொடுக்கும் ‘5’ சூப்பர் பிஸினஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ