சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டுமா... இந்த 5 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்
Skin Care Tips: உங்களின் சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த 5 பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள். அந்த 5 பழங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Skin Care Tips In Tamil: உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது, மகிழ்ச்சியான வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. அதேபோல்தான், சரும பாதுகாப்பும் மிக முக்கியமான ஒன்று. வெளிபுற நச்சுகளிடம் இருந்தும், வெயில் - பனி - மழை காலத்தில் வரும் நோய்களிடம் இருந்து சமருத்தை தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. சரும ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் கூட உணவு பழக்கவழக்கமும் இதில் முக்கிய பங்கை வகிக்கும் எனலாம்.
சரும பாதுகாப்புக்கு பழங்கள் அவசியம்
அதிலும் சருமம் மினுமினுப்பாகவும், தெளிவாகவும், பொலிவாகவும் இருக்க பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இதுபோன்ற உணவுகள் மூலம் கிடைக்கும் வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், நீர்ச்சத்து ஆகியவை சரும பாதுகாப்புக்கு உதவும். இவற்றை அதிகம் கொடுப்பது பழங்கள்தான். எனவே, சரும பாசதுகாப்புக்கு பழங்கள் இன்றியமையாததது.
உதாரணத்திற்கு ப்ளூபெரீஸ்கலில் ஆண்டிஆக்டன்ட்கள் நிறைந்துள்ளதால் சிறுசிறு தூசிகளால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல் பப்பாளி பழத்தில் உள்ள என்சைம்கள் உங்கள் சருமத்தை தெளிவாக்குவது மட்டுமின்றி சருமத்தில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கும்.
மேலும் படிக்க | பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
அதேபோல் வெள்ளரிக்காய், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்களால் சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைக்கும், இதனால் இயற்கையான பொலிவு கிடைக்கும். ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமிண் சி சருமத்தை பிரகாசமாக்கும், அவகாடோவில் உள்ள இயற்கையான கொழுப்பு மற்றும் வைட்டமிண்கள் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்கும். அந்த வகையில், உங்களின் சருமத்தை இயற்கையாகவே பொலிவாக்கும் இந்த பழங்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்
தர்பூசணி
தர்பூசணி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பழங்களில் ஒன்றாகும். இது எண்ணெய் படிந்த மற்றும் முகப்பருக்களின் பாதிப்பு கொண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்கும் பழமாகும். இதில் அதிக நீர்ச்சத்து மட்டுமின்றி ஃபைபர், வைட்டமிண்கள் உள்ளன. மேலும் ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் லைகோபீன் ஆகியவையும் இந்த பழத்தில் உள்ளது.
லெமன்
இதில் இயற்கையாகவே வைட்டமிண் சி நிறைந்திருக்கின்றன. இது ஆண்டிஆக்ஸிடன்ட் மட்டுமின்றி இயற்கையாகவே சுத்தம் செய்யும் தன்மைக்கொண்டது. இது சருமத்திற்கு உள்ள நச்சுகளை போக்கி பாதுகாப்பு அளிக்கும்.
வெள்ளரிக்காய்
இதிலும் அதிக நீர்ச்சத்து, பைபர், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமிண் கே மற்றும் சி ஆகியவை உள்ளன. இது சருமத்தை குளிர்ச்சியாக்கி சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சில் ஏற்கெனவே சொன்னதுபோல், வைட்டமிண் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
அவகாடோ
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்று. வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை இதில் உள்ளன. இது சருமத்தின் வயதாகும் தன்மையை மெதுவாக்கும். புறஊதா கதிர்களிடம் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும்.
மேலும் படிக்க | உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் சமையலறை பொருட்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ