EBay Layoffs 2023: ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது ஈபே! அதிரடி பணிநீக்கம்
Mass Layoff In 2023: டெக் நிறுவனங்களின் அதிரடி ஆட்குறைப்பு பட்டியலில் இணைந்தது ஈபே. கூகுள், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், இண்டெல், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களைப் போலவே பணியாளர்களை நீக்குகிறது ஈபே...
Tech Layoffs 2023: பணியாளர்களை நீக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் போக்கு தொடர்கிறது. டெக் உலகில் ஜாம்பவான்களா கருதப்படும் நிறுவனங்கள் பலவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்கின்றன. ஆயிரக்கணக்கான பணியாளர்களை 'திடீர்' பணிநீக்கம் செய்து வரும் நிறுவனங்களின் முடிவு ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு கவலைகளை அதிகரித்துள்ளது.. பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கடந்தாண்டில் இருந்து இந்த பணிநீக்க நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னதாக, அமேசான் 18 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில், பிரபல கூகுள் நிறுவனத்தின் 12 ஆயிரம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்தது. வீடியோ தொடர்பு செயலியான ஜூம் 15 சதவீத பணியாளக்ரலை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
ஜூம் சுமார் 1,300 பேரை அல்லது அதன் பணியாளர்களில் 15 சதவீதத்தை பணிநீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, வரும் நிதியாண்டில், தனது சம்பளத்தை 98 சதவீதம் குறைப்பதாகவும் யுவான் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ஈபே ஈகாமர்ஸ் நிறுவனம் பொருளாதார நிலையின் காரணமாக 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. eBay இன் தலைமை நிர்வாக இயக்குநர் ஜெமி லேனோன், இது தொடர்பாக அறிவித்ததை அடுத்து, ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சோகமான 2023... ஆயிரக்கணக்காணோர் வேலையிழப்பு - இது வெறும் டிரைலர் தானா?
ஆனால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஜெமி லேனோன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவு முதல் இறுதி அனுபவங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் திறனை வலுப்படுத்தவும், மேலும் புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவும் வகை செய்யும் என்று அவர் கூறினார்.
புதிய தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர் கண்டுபிடிப்புகள் மற்றும் முக்கிய சந்தைகள் மற்றும் மாறிவரும் மேக்ரோ, இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிலப்பரப்புடன் தொடர்ந்து மாற்றியமைக்க மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிக திறன் கொண்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கும் புதிய பாத்திரங்களை உருவாக்குவதற்கும் இந்த மாற்றம் எங்களுக்கு கூடுதல் இடத்தை வழங்குகிறது. 'முடிவுகளை மிகவும் திறம்பட மற்றும் அதிக வேகத்துடன் எடுக்க எங்கள் கட்டமைப்பை எளிதாக்குகிறோம்," என்று அவர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
கூகுள், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், இண்டெல் நிறுவனங்கள் மட்டுமல்ல, மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது பணிநீக்க நடவடிக்கையை முன்னெடுத்தது. கடந்த ஜனவரி மாதத்தில் 10 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
மேலும் படிக்க | மார்க்கெட்டை கலக்க வரும் சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5..! லீக்கான விலை பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ