ஜனவரி 2023 முதல் கூகுள் விதிகளில் மாற்றம்: இனி இவர்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்த முடியாது

Google New Rules: 2023 பிறந்தவுடன் பல துறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. புதிய வருடத்தில் புதிய விதிகள் வரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2022, 01:24 PM IST
  • கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த செய்தி ஏற்றதாக இருக்கும்.
  • Windows 7 மற்றும் Windows 8.l-க்கு க்ரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
  • அதாவது விண்டோஸ் 7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் வைத்திருப்பவர்கள் கூகுள் குரோம் பயன்படுத்த முடியாது.
ஜனவரி 2023 முதல் கூகுள் விதிகளில் மாற்றம்: இனி இவர்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்த முடியாது title=

கூகுள் புதிய விதிகள் 2023: 2022 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. விரைவில் 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2023 பிறந்தவுடன் பல துறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. புதிய வருடத்தில் புதிய விதிகள் வரும். தினசரி வாழ்க்கை, பொருளாதாரம், வங்கிச் செயல்முறைகள், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் காணப்படும். அவற்றைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.  

இந்த புதிய விதிகளில் கூகுள் உட்பட பல தொழில்நுட்ப நட்பு (டெக் ஃப்ரெண்ட்லி சர்வீசஸ்) சேவைகள் உள்ளன. நீங்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள நபராகவும், அதன் புதுப்பிப்புகளில் அதிக ஆர்வம் காட்டும் நபராகவும் இருந்தால், இந்த மாற்றங்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். 

Google Chrome ஐ இயக்குவதில் சிக்கல் வரக்கூடும்

கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த செய்தி ஏற்றதாக இருக்கும். Windows 7 மற்றும் Windows 8.l-க்கு க்ரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. அதாவது விண்டோஸ் 7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் வைத்திருப்பவர்கள் கூகுள் குரோம் பயன்படுத்த முடியாது. இதனால் பழைய லேப்டாப்களை பயன்படுத்துபவர்களுக்கு அதிக பிரச்சனைகள் வரக்கூடும். 

மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம் 

கார்ட் மூலம் பணம் செலுபவர்களின் கவனத்திற்கு

ஜனவரி 1 முதல் கார்டு எண் மற்றும் காலாவதி விவரங்களை கூகிள் சேவ் செய்யாது. அதாவது, ஜனவரி 1 முதல், நீங்கள் ஒவ்வொரு முறையும் இதை நிரப்ப வேண்டும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்லைனில் பணம் செலுத்துவதும் செயல்முறை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவு எடுக்கப்படுகிறது.

Stadia கேமிங் சேவை மூடப்படும்

கூகுள் ஸ்டேடியா சேவை ஒரு கிளவுட் கேமிங் சேவையாகும். கூகுள் இந்தச் சேவையை ஜனவரியில் நிறுத்தப் போகிறது. இந்த சேவை ஜனவரி 18 வரை மட்டுமே லைவாக இருக்கும். அதன் பிறகு அது நின்றுவிடும். Google Stadia சேவை நிறுவனம் நினைத்த அளவிற்கு பயனர்களிடையே பிரபலமடையவில்லை. ஆகையால் இந்த சேவையை நிறுத்திவிட கூகிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்க | சூப்பர் ஆஃபர்! ரூ. 28,550 தள்ளுபடி, வெறும் ரூ. 41,350-க்கு ஆப்பிள் ஐபோன் 13 வாங்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News