அரைகுறை ஆடையில் பிரமீடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட் செய்த மாடலும், புகைப்படக்களைஞர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எகிப்து பிரமீடில் (Egypt-Pyramids) மாடல் ஒருவர் பண்டையகால ஆடையை உடுத்தி கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியதை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த மாதம் மற்றும் புகைப்படக்களைஞர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கெய்ரோவின் புறநகரில் அமைந்துள்ள ட்ஜோஸர் பிரமிடு முன்பு பழங்கால உடையில் சல்மா என்ற 26 வயது மாடல் கவர்ச்சியாக போட்டோஷூட் (Photo Shoot) மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரமிடு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. 



ALSO READ | Viral News: கல்யாண சமையல் சாதம், இனி வீடு வந்து சேரும், இது கொரோனா கல்யாணம்!!


இதையடுத்து, மாடலை படம் பிடித்த புகைப்பட கலைஞர் அவமதிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதேபோல் பேஷன் மாடல் சல்மா அல்ஷிமியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சல்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். சல்மா இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவுன், அவரது ஃபாலோவர்கள் இது எகிப்து பண்டையகால ஆடையல்ல ஆனால் அதை ஒப்பிடுவது போன்று ஆபாசமான ஆடையை உடுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினார்.



இதையடுத்து எகிப்தின் பண்டைய பாரம்பரியத்தின்படி இல்லாத ஆடைகளை அணிந்து அவமதித்ததற்காக சல்மா கைது செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தொல்பொருள் அமைச்சகம் விதித்த விதிகளை மீறியவதாகவும் சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR