Viral News: கல்யாண சமையல் சாதம், இனி வீடு வந்து சேரும், இது கொரோனா கல்யாணம்!!

பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில், சாப்பாட்டு செலவு மிச்சம் என பாராமல், வீட்டு வாசலுக்கு சென்று கல்யாண சாப்பாட்டை அளித்த இந்த குடும்பம் உண்மையில் ஒரு உன்னதமான செயலை செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 05:46 PM IST
  • புதிய இயல்புடன் கொரோனா காலத்தில் வாழ்க்கை தொடர்கிறது.
  • தொற்றுநோய், திருமணங்கள் நடக்கும் முறையையும் மாற்றி விட்டது.
  • கேரியலில் வந்த கல்யாண சாப்பாடு டிரெண்ட் ஆகி வருகிறது.
Viral News: கல்யாண சமையல் சாதம், இனி வீடு வந்து சேரும், இது கொரோனா கல்யாணம்!! title=

கொரோனா வைரஸ் தொற்று நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றிவிட்டது. 'இயல்பானது' என்று கருதப்பட்டவற்றின் வரையறை இப்போது மாறிவிட்டது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் மாற்றத்தைக் கண்டுள்ளன. மக்கள் புதிய இயல்புக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டார்கள். புதிய இயல்புடன் கொரோனா காலத்தில் வாழ்க்கை தொடர்கிறது.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் போலவே, தொற்றுநோய் (Pandemic), திருமணங்கள் நடக்கும் முறையையும் மாற்றி விட்டது. ஊர் கூடி பந்தல் போட்டு, உற்றார் உறவினர் ஓர் மாதம் முன்பு வீடு வந்து சேர்ந்து, தினமும் ஒரு திருவிழாவாய் நாட்கள் கழிந்து, உறவினர்களும், நண்பர்களும் புடைசூழ, அனைவரது ஆசீர்வாதத்துடன் நடக்கும் திருமணம் இப்போது ‘அந்த கால ஞாபகம்’ ஆகிவிட்டது. கொரோனா நம் திருமணங்களுக்கும் வேறு ஒரு வண்ணத்தை பூசி விட்டது.

அனைவரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு, பல இந்திய குடும்பங்கள் இப்போது 'வீட்டிலிருந்தே திருமணம்' அல்லது 'மெய்நிகர் திருமணங்களை' நடத்த முன்வருகின்றன. இருப்பினும், ஒரு திருமண விழாவில் (Marriage) கலந்துகொள்வதில் மிகவும் சுவாரஸ்யமான பகுதியாக இருப்பது ‘கல்யாண சாப்பாடுதான்’ அட்டகாசமான சாப்பாடு இல்லாமல் எந்த திருமணம் நிறைவடைந்திருக்கிறது? ஆனால் மெய்நிகர் திருமணத்தில் இதை எங்கிருந்து எதிர்பார்ப்பது?

இதற்கும் ஒரு தீர்வு பிறந்து விட்டது. ஆம்!! தமிழகத்தில் ஒரு குடும்பம் இதற்கான ஒரு அற்புதமான தீர்வை கண்டுபிடித்துள்ளது. ‘கல்யாண சாப்பாட்டை’ விருந்தினர்களுக்கு அவர்களது வீட்டு வாசலில் வழங்க அக்குடும்பம் ஏற்பாடு செய்தது. விருந்தினர்கள் 4 வண்ணமயமான பைகள் மற்றும் வாழை இலைகளைப் பெற்றனர். ஒவ்வொன்றிலும் 4 டிஃபின் கேரியர்கள் இருந்தன. வாழை இலையில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளுடன் மொத்தம் 12 உணவு வகைகள் கூடைகளில் இருந்தன. தாம்பூலப் பையும் அனுப்பப்பட்டது.

ஒரு ட்விட்டர் பயனர், இவற்றின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “திருமண அழைப்பின் புதிய டிரெண்ட். கல்யாண சாப்பாடு உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படும்” என்று எழுதினார்.

கொரோனா (Coronavirus) காலத்தில் அனைவருக்கும் மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகமாகியிருக்கும் இவ்வேளையில், இப்படி ஒரு யோசனை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ட்வீட் வைரல் ஆகி, நெட்டிசன்கள் (Netizens) அந்த குடும்பத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ALSO READ: 1130 கோடியை லாட்டரியில் வென்ற இந்த ஜோடி தங்களுக்காக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?

பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில், சாப்பாட்டு செலவு மிச்சம் என பாராமல், வீட்டு வாசலுக்கு சென்று கல்யாண சாப்பாட்டை அளித்த இந்த குடும்பம் உண்மையில் ஒரு உன்னதமான செயலை செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

இனி, இந்த யோசனையை பலரும் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இன்னும் சில நாட்களுக்கு உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நன்பர்களின் வீட்டு திருமணங்களை நீங்கள் ரசிக்கப்போகும் முறை இதுதான்:

திரையில் திருமணம், கேரியரில் கல்யாண சாப்பாடு!!

Trending News