எகிப்த் வனவிலங்கு பூங்கா ஒன்றில் கழுதைக்கு வண்ணம் பூசி வரிகுதிரைப் போல் மாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எகிப்தின் காயிரோ சர்வதேச முனிசிபால் பார்க் வனவிலங்கு பூங்காவிற்கு மொகமத் சர்ஹான் என்பவர் சமீபத்தில் விஜயம் செய்துள்ளார். அப்போது அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது முகப்பத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தில் அவர் ஒரு வரிகுதிரையுடன் இருப்பதுப் போல் புகைப்படம் காட்சியளிக்கிறது. ஆனால் அந்த பதிவினை பார்த்த இணைய ரசிகர்கள் இது வரிகுதிரை இல்லை எனவும், கழுதைக்கு வண்ணம் பூரி வனவிலங்கு பூங்காவினர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.


காரணம் வரிகுதிரைகளுக்கு இருப்பது போன்று குறுகிய வட்ட வடிவிலான காதுகளை இந்த விலங்கு கொண்டிருக்கவில்லை. மாறாக கழுதைகளுக்கு இருப்பது போன்று நீண்ட காதுகளை கொண்டுள்ளது.



இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பிரபல உள்ளூர் வனொலி நிலையமானது இந்த விவகாரம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்து வனவிலங்கு பூங்காவின் தலைமை செயல் அதிகாரியை தொடர்புகொண்டுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டினை வனவிலங்கு பூங்கா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மேலும் இந்த விலங்கானது புதிய ரக விலங்காக இருக்கலாம் எனவும் பதில் அளித்துள்ளது.


எனினும் இதுவரை இந்த விலங்கினை குறித்த உன்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் காயிரோ சர்வதேச முனிசிபால் பார்க் வனவிலங்கு பூங்காவில் இருப்பது கழுதையா இல்லை வரிகுதிரையா? என்னும் கேள்வி அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.