Tamil nadu Assembly Elections 2020, TN Voter List: அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும், யாருடன் கூட்டணி, எப்படி தேர்தலை எதிர்கொள்வது போன்ற விவகாரங்களை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் தாக்கி, போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல பீகாரில் இந்த மாதம் முதல் சட்டசபை தேர்தல் (Bihar Assembly Elections) நடைபெற உள்ளது. தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து, அதன் பிறகு நவம்பர் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் சமயத்தில் உங்களிடம் வாக்காளர் அட்டை (Voter ID Card) இல்லை, ஆனால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது என்றால், நீங்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.


வாக்காளர் பட்டியலில் (Voter List in Tamil Nadu) ஒருவரின் பெயர் இருந்தால், அதேநேரத்தில் அவரது வாக்காளர் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அல்லது சில காரணங்களால் வாக்காளர் அடையாள அட்டை இன்னும் பெறவில்லை என்றால் அவர் வாக்களிக்க தகுதியானவராக கருதப்படுவார். அத்தகைய நேரத்தில், ஒரு வாக்காளர் தனது மற்ற அடையாள 
அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். வாக்களிக்க அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வாக்களிக்க பட்டியலிட்டுள்ளது.


ALSO READ |  Voter ID Card திருடப்பட்டதா அல்லது தொலைந்து விட்டதா -மீண்டும் எப்படி வாங்குவது?


பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சேவை அடையாள அட்டை, பாஸ் புக், பான் கார்டு (PAN Card), ஸ்மார்ட் கார்டு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ வேலை அட்டை, தொழிலாளர் அமைச்சத்தினால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீடு, புகைப்படம் அடங்கிய ஓய்வூதிய ஆவணங்கள், எம்.பி. ஆஃப் இந்தியா (UIDAI) வழங்கிய ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.


வாக்காளர் பட்டியலில் உங்களுக்கு பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி சரிபார்ப்பது?
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயரை பல வழிகளில் சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. வாக்காளர் ஹெல்ப்லைன், மொபைல் பயன்பாடு அல்லது www.nvsp.in போர்ட்டல் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம். 


ALSO READ |  வேட்பாளர் பட்டியலில் பிழையா?, எப்படி திருத்துவது?


மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பெயரை https://Electoralsearch.in இல் நேரடியாக தேடலாம். ஹெல்ப்லைன் எண் 1950 ஐ எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலமும் இது குறித்த தகவல்களைப் பெறலாம். Search by EPIC No or Details மூலமும் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR