Recruitment 2022: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில், 2020, 2021,2 022-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துக் கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம்:  நாளை, வெள்ளிக்கிழமை (14.10.2022), காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். அறிஞர் அண்ணா மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடி, நாமக்கல்.


மேலும் படிக்க | இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆர்வமா? இந்த தகுதிகள் இருக்கிறதா?


வேலைவாய்ப்பு விவரங்கள்: 


பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்; டாடா தொழிச்சாலை ஓசூர் 


படிப்பு:  2020, 2021, 2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்


உயரம் மற்றும் எடை: 145 செமி, 43 கிலோ (குறைந்தபட்சம்) முதல் 65 கிலோ வரை (அதிகபட்சம்)


மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்: TEPL நிறுவனத்தில் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை (தயாரிப்பியல்) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு


பணியாளர்க்கான நலத்திட்டங்கள்:


நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை


நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்


தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்


ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து" நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு,  04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க | NCERTயில் வேலை செய்ய விருப்பமா? இந்த தகுதிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ