சிறுநீரக கற்களை கொண்டு தனது நிச்சயதார்த்த மோதிரம் தயார் செய்த நபரின் கதை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என வாழ்கையில் மிக வேதனையான காலங்களில் நான் வால்துகொண்டிருந்த போது தான் நான் கடந்த ஜனவரி 2016 ஆம் ஆண்டு ரெஜினா-வை சந்தித்தேன். கடந்த சில காலமாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தேன். இறுதியில், நான் நான் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனையில் ரெஜினா நைட் ஷிப்ட்-ல் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் என்னை போன்று பூனை வளர்ப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதை பற்றி நான் அறிந்த போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. 


ரெஜினாவிடம் நான் பூனையை பற்றி பேச துவங்கும் நேரத்தில், எனக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதனால் தான் வயிற்றுவலி வந்துள்ளதாகவும் மருத்துவர் கூறினார். இதையடுத்து, அவர்கள் கொடுத்த மருந்துக்களை நான் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பினேன். பின்னர், சில நாட்களுக்கு பின்னர் எனக்கு அறுவை சிகிச்சை செய்வதக்கு திட்டமிட்டனர். 


அறுவை சிகிச்சைக்காக நான் சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் விரைந்தேன். அப்போது நான் ரெஜினாவை சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. இதையடுத்து, என்னுடைய அறுவை சிகிச்சை முடிந்தது. நான் போதை மருந்துகளிலிருந்து எழுந்தேன், அப்போது எனது அருகில் ஒரு வட்ட தட்டில் நட்சத்திரத்தை போன்ற எதோ இருப்பதை கண்டேன். அப்போது, ரெஜினா என்னிடம் வந்து நீங்கள் வெளியில் செல்ல விரும்பினால் என்னை அழையுங்கள் என்று அவர் கூறினார். நான் நினைத்தேன் "இந்த பெண் மிகவும் வித்தியாசமானவள் என்று". இதையடுத்து, மருத்துவர் எனது சிறுநீரகத்தில் இருந்து எடுத்த சிறுநீர் கற்களை எடுத்து கொண்டு என்னிடம் வந்து காட்டினார். அப்படியே சில நாட்கள் கடந்தது. 


இதையடுத்து, நாங்கள் முதலில் ஒரு பூங்காவில் சந்தித்தோம். அந்த சந்திப்பு எங்களால் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. பின்னர், நான் என்னுடைய வாழ்நாள் நீரம் முழுவதையும் ரெஜினாவுடன் செலவிட விரும்பினேன். அவருக்கு நான் ஒரு தனித்துவமான மோதிரத்தை பரிசளிக்க விரும்பினேன். இதை தொடர்ந்து நான் மோதிரத்தை ஆன்லைனில் தேட ஆரம்பித்தேன். அதுமட்டும் இன்றி பிரபல நகை கடை முழுதும் தேடி அலைந்தேன். அப்போது, நான் விண்கற்கள் மோதிரங்களை பார்த்தேன் அவளுக்கு பரிசளிக்க இது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இதைடுத்து, சிறுநீரக கல்லை கொண்டு அவளுக்கு மோதிரம் பரிசளிக்கலாம் என்று எண்ணினேன். 


இப்படி நான் யோசிக்க ஆரம்பித்ததை நினைத்து எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். இதையடுத்து, ஆறு மாதத்திற்கு பின்னர் நான் ரெஜினாவிடம் என்னுடைய விருப்பத்தை கூறினேன். அவரும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தார். அப்போது நான் அவளுக்கு வித்தியாசமாக தயார் செய்யபட்ட சிறுநீரக கல்லை கொண்டு உருவாக்கின மோதிரத்தை பரிசளித்தேன். 


பலரும் இந்த மோதிரத்தை மிகப்பெரிய விஷயமாக நினைத்தனர். ஆனால், இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட தொடக்கத்தின் மறவா சின்னமாக திகழ்ந்தது. அந்த மோதிரம் எங்களின் முழுமையான அன்பால் பகிரப்பட்டது. இந்த வித்தியாசமா மோதிரத்தை உருவாக்க உதவிய அந்த பிரபல நகை கடைக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.