லண்டனில் வசித்து வரும் 42-வயது பெண்மனி ஒருவர், தனது 21-வது பிரசவத்திற்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு முன்வந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் வசித்து வரும் Sue Radford மற்றும் Noel சமீபத்தில் தங்களது 21-வது குழந்தையினை வரவேற்றுள்ளனர். 42-வயது ஆகும் Sue Radford தற்போது பாட்டியாக ப்ரமோசன் பெற்றுள்ள நிலையில், இனி தனக்கு குழந்தை வேண்டாம் என குடும்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்துள்ளார்.



குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும் என நம்பும் இத்தம்பதியர் ஆரம்பத்தில், தங்களின் திருமணத்தின் போது 2 அல்லது 3 குழந்தைகளை மட்டும் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனினும் இந்த முடிவு 9-வது குழந்தை பிறக்கும் வரை செயல்பாட்டிற்கு வரவில்லை.


பின்னர் 9-வது குழந்தைக்கு பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட Sue Radford, சில காரணங்களால் மீண்டும் இந்த முடிவினை தள்ளிபோட நினைத்துள்ளார். இந்நிலையில் தற்போது Sue Radford 21 குழந்தைகளுக்கு தாயாக நேர்ந்துள்ளது. எனினும் தற்போது தனது மூத்த மகளுக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தனக்கு குழந்தைகள் பிறப்பது நன்றாக இருக்காது என தற்போது இந்த முடிவினை Sue Radford, எடுத்துள்ளார்.



தனது 14-வது வயதில் முதல் குழந்தைக்கு தாயான Sue Radford., தனது வாழ்நாளில் 800 வாரங்கள் கர்பவதியாக வாழ்ந்துள்ளார்.


Sue Radford - Noel தம்பதியரின் பிள்ளைகளின் பெயர் வரிசையாக.... Chris, Sophie, Chloe, Jack, Daniel, Luke, Millie, Katie, James, Ellie, Aimee, Josh, Max, Tillie, Oscar, Caspar, Hallie, Phoebe, இதில்Archie. இதில் Sophie-க்கு 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.