EPFO புதுப்பிப்பு: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டி பரிமாற்ற செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு விரைவில் வட்டிப் பணம் கிடைக்கும். தங்கள் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் பிஎஃப் சந்தாதாரர்கள் எளிதாகச் சரிபார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான வட்டியை சந்தாதாரர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யும் செயல்முறையை இபிஎஃப்ஓ தொடங்கியுள்ளது. விரைவில் பயனாளிகளின் பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரத் தொடங்கும். இந்த தகவலை இபிஎஃப்ஓ அமைப்பு தானே தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பயனர், ஈபிஎஃப்ஓ -விடம் வட்டி பற்றி கேட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இபிஎஃப்ஓ கருத்துத் தெரிவித்ததோடு, வட்டித் தொகை விரைவில் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளது.


இபிஎஃப்ஓ தனது ட்விட்டர் பக்கத்தில், “வட்டித் தொகை அனுப்பப்படும் செயல்முறை தற்போது நடந்து வருகிறது. வட்டி விரைவில் வரவு வைக்கப்படும். முழு வட்டியும் கணக்கில் வரவு வைக்கப்படும், வட்டி இழப்பு ஏற்படாது. தயவுசெய்து பொருமையாக இருக்கவும்." என்று கூறியுள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் 8.15 சதவீத வட்டி வழங்குவதாக சமீபத்தில் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


வீட்டில் இருந்தபடியே பிஎஃப் இருப்பை செக் செய்யலாம்


இப்போது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய எங்கும் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே அவர்கள் மிக எளிதாக இந்த வேலையைச் செய்யலாம். பிஎஃப் சந்தாதாரருக்கு 4 வழிகளில் பிஎஃப் இருப்பை அறியும் வசதியை இபிஎஃப்ஓ வழங்குகிறது.


மிஸ்டு கால் கொடுத்து நிமிடங்களில் இருப்பைக் கண்டறியலாம்


மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.


மேலும் படிக்க | உங்கள் கனவு வீட்டை கட்ட ஆசையா? PF கணக்கில் இருந்து எளிதாக பணம் முறைகள் இதோ!


SMS மூலம் தகவல்களைப் பெறலாம்


எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். ஆங்கிலத்தில் தகவல் வேண்டுமானால், LAN என்பதற்குப் பதிலாக ENG என்று எழுதவும். தமிழில் தகவலுக்கு, LAN க்கு பதிலாக TAM என்று எழுதவும். இந்தியில் தகவலுக்கு, LAN க்கு பதிலாக HIN என்று எழுதவும். இந்தியில் கணக்குத் தகவல்களைப் பெற, EPFOHO UAN HIN என்று எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். சிறிது நேரம் கழித்து உங்கள் மொபைலில் பிஎஃப் இருப்புத் தகவல் வரும்.


இணையதளத்தின் உதவியைப் பெறலாம்


ஆன்லைனில் பிஎஃப் இருப்பைக் காண, EPF பாஸ்புக் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பிஎஃப் சந்தாதாரர்கள் UAN மற்றும் பாஸ்வர்ட் மூலம் இந்த போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகு Download/View Passbook என்பதைக் கிளிக் செய்யவும். இதைச் செய்த பிறகு, பாஸ்புக் உங்கள் முன் திறக்கும், அதில் நீங்கள் உங்கள் பிஎஃப் தொகை இருப்பைக் காணலாம்.


மேலும் படிக்க | வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ