கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கிய அட்வைஸ் - சர்க்கரை வேண்டாம்
Pregnancy Tips | கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இனிப்புகளை குறைவாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Pregnancy Tips Tamil | கர்ப்பமாக இருக்கும் பெண்களே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கர்ப்ப காலத்திலேயே நீங்கள் தீர்மானிக்க முடியும். அவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் ஆபத்தை உங்களாலேயே குறைக்க முடியும். என்ன நம்பும்படியாக இல்லையா?. ஆனால் இது உண்மை என்பதை ஆய்வு மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பமாக இருப்பது முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு குழந்தைகள் இனிப்புகளை எவ்வளவு குறைவாக எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களின் வாழ்க்கையின் பின்பகுதியில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளில் பிரதிபலிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளாக மாறிவிட்டன. வீட்டில் ஒருவருக்கு குறைந்தபட்சம் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. இவை இரண்டும் வருவதற்கு மிக அடிப்படையானது மோசமான வாழ்க்கை முறையே ஆகும். உணவுகளில் கவனம் செலுத்தாமல் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஆகியவை சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பு உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவே கூடாது. இவை செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தி இன்சுலின் சுரப்பில் சீரற்ற தன்மையை உருவாக்குகின்றன. இதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஒருவரை பாதிக்கிறது.
மேலும் படிக்க | ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும்
நீரிழிவு நோய் ஆய்வு
இருப்பினும் இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. எந்த காரணத்துக்காக ஒருவருக்கு நீரிழிவு ரத்த அழுத்தம் வருகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட பல காரணிகளில் இவையெல்லாம் இடம்பெற்றிக்கின்றன. மேலும், இந்த நாட்பட்ட நோய்கள் ஒருவரை பாதிக்காமல் இருக்க என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பது குறித்தும் மருத்துவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிதை மாற்றம் குறித்தும் அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் பல சர்பிரைஸான முடிவுகள் தெரியவந்திருக்கிறது.
நீரிழிவு நோய் வாய்ப்பு
கருத்தரித்த நாளில் இருந்து 1000 நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளும் இனிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குழந்தையின் பின்நாளில் சர்க்கரை நோய் ஆபத்தில் எதிரொலிக்கிறது என தெரிவந்திருக்கிறது. அதாவது கர்ப்பமான பெண்கள் மிக குறைந்த சர்க்கரை, இனிப்புகளை எடுத்துக் கொண்டால் அவர்களின் குழந்தைகள் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 35 விழுக்காடு என கூறுகிறது அந்த ஆய்வு. மேலும், உயர் ரத்த அழுத்தம் வாய்ப்பை 20 விழுக்காடு குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை அளவு
உலக சுகாதார அமைப்பு சர்க்கரை எடுத்துக் கொள்ளும் அளவு குறித்து வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரையை கொடுக்கவே கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பெரியவர்கள் தினமும் 50 கிராம் அளவுக்கு மட்டுமே சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது, நாம் சாப்பிடும் உணவுகளிலேயே சர்க்கரையும் சேர்ந்திருக்கிறது. அதனையும் சேர்த்து தான் இந்த அளவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெறுமனே 50 கிராம் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாகவே சர்க்கரை நுகர்வை கூடுமானவரை குறைத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது. பின் நாட்களில் ஆரோக்கியமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீங்க... ஆசிடிட்டி பிரச்சனை ஏற்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ