தொலைவில் இருந்தாலும் இனி திருவண்ணாமலை உங்கள் கைவசம்!
எங்கிருந்தாலும் திருவண்ணாமலையோடு இணைந்து இருப்போம்.!
திருவண்ணாமலையை விட்டு வெளியில் இருக்கும் நண்பர்களுக்கு ஒரு இன்பச் செய்தி.
தங்களது சொந்த ஊரான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை நேரில் காண முடியாத நிலையில் இருக்கும் தங்களுக்கு, திருவண்ணாமலையினை நேரடியாக காணும் வகையில் புது வசதி உருவாகியுள்ளது.
இணையதளம் வழியாக அண்ணாமலையாரை தரிசிக்க இணையதள இணைப்பு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வலைதளத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மலையின் படம் பதிவேற்றப்படுகிறது. இந்த வசதியை அமெரிக்கர் ஒருவர் தன் சொந்த செலவில் செய்துள்ளார்.
அந்த இணையதளத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Website URL: http://www.arunachala-live.com/
எங்கிருந்தாலும் திருவண்ணாமலையோடு இணைந்து இருப்போம்.!