புதுடெல்லி: ஏழரை என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டம். இது ஜாதகத்தில் சந்திரன் ராசியிலிருந்து கணக்கிடப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேத ஜோதிடத்தில், நீதியின் கிரகமாக கருதப்படுகிறது சனி. சுமார் இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்து அதன் பிறகு ராசியை மாற்றும் சனியின் சஞ்சாரத்தில், அது சந்திரனின் ராசியிலிருந்து பன்னிரண்டாவது வீட்டில் இருக்கும்போது, ​​ஏழரை நாட்டு சனி தொடங்குகிறது.


பன்னிரண்டாம் வீட்டில் இரண்டரை வருடங்கள் சஞ்சரித்துவிட்டு சந்திரனின் ராசியில் பிரவேசித்து இரண்டரை வருடங்கள் தங்கும். அதன் பிறகு சந்திரன் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டிற்குச் சென்று இரண்டரை வருடங்கள் அங்கு சஞ்சரிக்கிறது. 


மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவு செய்பவரா? 


ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகரின் பன்னிரண்டாம் இடத்தில் இருந்து இரண்டாம் வீடு வரை சனி இருக்கும் இந்த ஏழரை வருட காலம் ஏழரை நாட்டு சனி என்று அழைக்கப்படுகிறது. 


ஏழரைச் சனியின் பலன்களும், பாதிப்பும், ராசிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.  ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப, சனீஸ்வரர் பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது. ஏழரை சனி நடக்கும்போது, ஒருவருக்கு பலவிதமான மோசமான அனுபவங்கள் ஏற்படலாம்.


முதல் இரண்டரை ஆண்டுகள் மனக் கஷ்டத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகள், பொருளாதரத்தில் சுணக்கத்தையும், உடல்நலனில் பின்னடைவையும் கொடுக்கும் சனீஸ்வரர், இறுதி ஏழரை ஆண்டுகளில் ஜாதகரின் இழப்பை ஈடுசெய்கிறார்.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி, சீரழிய போகும் ராசிக்காரர்கள்


ஒட்டுமொத்தமாக, சனியின் ஏழரை ஆண்டு கால ஆக்ரமிப்பில், ஒரு நபர் வாழ்க்கையின் உண்மையை அறிந்து, வாழ்க்கை என்ன என்பதை புரிந்துக் கொள்கிறார்.  
மகரம், கும்பம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பிற ராசிக்காரர்களைப் போல வாட்டி வதைப்பதில்லை.


 மனிதனின் வாழ்வில் ஏழரை சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடும். அதில் முதல் முறை வருவதற்கு மங்கு சனி என்றும், இரண்டாவது முறை வருவதற்கு பொங்கு சனி என்றும், 3ம் முறையாக வருவதற்கு மரணச் சனி என்றும் குறிப்பிடப்படுகிறது.


மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என ஏழரை நாட்டு சனி பல வகைப்பட்டாலும், சனி திசை, சனி புத்தி என சனீஸ்வரர் அவ்வப்போது நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | இந்த 2 ராசிக்காரர்கள் இன்று எதிலும் கவனம்; நிதானமாக செயல்பட வேண்டும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR