பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல்.  


சமீபத்தில் முகநூல் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து முகநூல் நிறுவனம் தொடர்ந்து பதில் தெரிவித்தும் வருகிறது.  


இந்நிலையில், முகநூல் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டொலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சுமார் 87 மில்லியன் முகநூல் பயனாளர்களின் தரவுகளை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் விசாரித்து வந்தது. வெளியான இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க ஏதுமில்லை என்று முகநூல் மற்றும் மத்திய வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது. 


ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை கமிஷன் விதிக்கும் அதிகபட்ச தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது.