இணையத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருந்த பூனை திடீர் மறைவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம். இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை தனது எட்டு வயதில் உயிரிழந்துள்ளது.


சமூக வலைத்தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை பூனையின் உரிமையாளர் பிரிடாவ்ஸ்கி நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள், எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் லில் பாப் பூனை மிகவும் பிரபலமானது. காட்டு பூனைக்குட்டியாக மீட்கப்பட்ட இந்த லில் பாப், வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சினைகளோடு பிறந்திருந்தது. லில் பாப் பூனை வாழ்ந்த போது, விலங்குகளுக்கு சேவை செய்வதற்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான டொலர் நிதி திரட்டுவதற்கு உதவியது என்று மைக் பிரிடாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். உலக விலங்குகளின் நலத்திலும், உலக நாடுகளிலுள்ள மில்லியன்கணக்கான மக்களிடமும் லில் பாப் பூனை பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு குறிப்பிடுகிறது. 



தனித்தன்மையான தோற்றத்தால் இணையத்தில் லில் பாப் பிரபலமடைந்தது, லில் பாப்பின் வளர்ச்சிக்குறைவு நோயால், வாழ்க்கை முழுவதும் பூனைக்குட்டியை போலவே வாழ்ந்து வந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்டு அதிகமான கை அல்லது கால் விரல்கள் கொண்டதாக இந்த பூனை இருந்தது. ஒவ்வொரு பாதத்திலும், ஒரு விரல் கூடுதலாகவும், சரியான வளர்ச்சியுறாத தாடையையும், பற்கள் இல்லாததால் நாக்கு வெளியே நீட்டி கொண்டு இந்த பூனை இருந்தது.


இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார். இறப்புக்கு முன்னர் இந்தப் பூனை எலும்பு நோய் தொற்றால் துன்பப்பட்டு வந்தது. இதன் உடல் நலம் பற்றிய தகவல்களை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்த இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிடாஸ்கி பகிர்ந்து வந்தார். பேஸ்புக்கில் இந்தப் பூனையை 30 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.