சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது, அடிக்கும் ஜாக்பாட்
Venus Transit: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் பலன் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒரு நபரின் ஆளுமை மற்றும் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இதேபோன்ற ஒரு முக்கிய மாற்றம் வரும் மார்ச் 31ம் தேதி நடக்க உள்ளது.
சுக்ரன் தனது ராசியை மாற்றவுள்ளார். சுக்கிரன் கிரகம் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த நிலையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் பலன் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள்
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மாற்றம் நல்ல பலனைத் தரும். சுக்ரனின் மாற்றத்தின் போது நிதி நிலை மேம்படும். பணியில் இருப்பவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல செயல்திறனைக் காணலாம். மேலும், பணியிடத்தில் பாராட்டுகள் குவியும். வெளிநாட்டிலிருந்து அதிகப்படியான பண வரவை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும்.
ரிஷபம்: சுக்கிரனின் ராசி மாற்றம் சுப பலன்களைத் தரும். முன்பு செய்த முதலீடு நல்ல பலனைத் தரும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சுக்கிரனின் இந்த மாற்றம் ரிஷப ராசிக்கார்ரகளின் காதல் வாழ்க்கைக்கு நல்லதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். அதிகாரிகளை மகிழ்விப்பீர்கள்.
துலாம்: பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். திருமண வாழ்விலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள்.
மேலும் படிக்க | மேஷ ராசிக்குள் நுழையும் ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்..!!
தனுசு: சுக்கிரனின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். சுக்கிரனின் ராசி மாற்ற காலத்தில் பணம் ஈட்டும் முயற்சிகள் வெற்றியடையும். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் முடிவும் உங்களுக்கு சாதகமாக வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கௌரவம் அதிகரிக்கும். இது தவிர, வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சுக்கிரன் சஞ்சாரத்தின் போது என்ன செய்ய வேண்டும்?
- சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது வெள்ளை நிற பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
- சுக்கிரன் வலுப்பெற, வெள்ளிக்கிழமை விரதம் இருங்கள். மேலும், லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்கவும்.
- வெள்ளிக்கிழமை அன்று ஏழைகளுக்கு அரிசி, பால், வெள்ளை இனிப்புகள், வெள்ளை ஆடைகள், சர்க்கரை போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
- ஜோதிட சாஸ்திரப்படி, கையில் வெள்ளி வளையல்கள், கழுத்தில் வெள்ளி செயின் அணிவதால் சுக்கிரன் வலுப்பெறுகிறார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பகவானின் உதயம்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும், பண வரவு அதிகரிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR