மேஷ ராசிக்குள் நுழையும் ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்..!!

ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழையும் நிலையில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2022, 03:59 PM IST
மேஷ ராசிக்குள் நுழையும் ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்..!! title=

ராகு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். பொதுவான வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் ராகு கிரகத்துடன் நேரடியாக தொடர்புடையவை. ஜோதிட சாஸ்திரப்படி ராகு கிரகம் ஏப்ரல் 12ம் தேதி  ராசி மாறுகிறது. ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைவார். ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் ராகுவின் இந்த சஞ்சாரம் 3 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.

மேஷம்

இந்த ராசியில் செவ்வாய் ஆதிக்கம் செலுத்துகிறார். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்தின் தளபதி என்று கூறப்படுகிறது. மேஷத்தில் ராகு நுழைவது சில சமயங்களில் எதிர்மறையான பலன்களைத் தரும். ராகு சஞ்சார காலத்தில் கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதி இழப்பு ஏற்படலாம். எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | Astro: புத ஆதித்ய யோகத்தினால் பிரகாசிக்க போகும் ‘5’ ராசிகள்..!! 

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தின் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த நேரத்தில் கேது இந்த ராசியில் இருக்கிறார். இதனுடன் ராகுவின் கண்களும் இருக்கப் போகின்றன. வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகள் வரலாம். இலக்கை அடைவதில் சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

மகர ராசியினருக்கு, ராகு வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கலாம். உத்தியோகம், தொழில் சம்பந்தமான காரியங்களில் தடைகள் ஏற்படலாம். உறவுகள் சிதைந்து போகலாம். மேலும், பேச்சில் கவனம் தேவை. பெயர்ச்சி காலத்தின் போது கோபத்தை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் தொல்லை தரலாம். மனதில் தேவையற்ற பயம் இருக்கலாம். பணத்தை சேமிப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse 2022: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள்... 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News