புதன் அஸ்தங்கம்; இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கதி அதோ கதி
புதன் கிரகம் மறைவது சாதகமற்றதாக கருதப்படுகிறது. புதன் ஜனவரி 18 முதல் ஜனவரி 29 வரை நிலையற்ற நிலையில் இருந்து 5 ராசிக்காரர்களுக்கு தொல்லைகளைத் தருவார்.
புதுடெல்லி: வேத ஜோதிடத்தில், கிரகத்தின் ராசி மாற்றத்திற்கு, அதன் வேகத்தில் இருந்து அதன் அமைப்பு மற்றும் உயரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில மாற்றங்கள் சுபமானவை, சில அசுபமானவை. இன்று அதாவது ஜனவரி 18, 2022 முதல் வணிகக் கடவுளான புதன் அஸ்தமிக்கப் போகிறார். 5 ராசிக்காரர்களுக்கு புதனின் மறைவு மிகவும் கொடுமைய இருக்கும். ஜனவரி 29-ம் தேதி புதன் உதயமாகும் வரை இந்த ராசிக்காரர்களுக்கு கெடுதல்கள் மட்டுமே நடைபெறும்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் (Zodiac Sign) தொழில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளால் சூழப்பட்டிருப்பதை உணர்வீர்கள். தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும். ஆவணங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு உடல்நலக் சோர்வாக இருக்கும். இந்த நபர்களுக்கு தோல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களும் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். செய்யும் வேலை கெட்டு விடும். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது.
மகரம்: மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் பிரச்சனை வரலாம். பரிவர்த்தனைகளை கவனமாக செய்யுங்கள்.
கும்பம்: கும்ப ராசி மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. உங்களால் முடிந்தவரை கடினமாக உழைக்கவும்.
புதனை வலுப்படுத்துவது எப்படி
புதனின் சுப பலன்களைப் பெற பசுவுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும், பச்சை ஏலக்காய்-பச்சை காய்கறிகளை சாப்பிடவும், பச்சை நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR